1. செய்திகள்

'இ நாம்' திட்டத்தில் விளைபொருள் விற்க கலெக்டர் அழைப்பு!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Collector calls to sell products in 'E Naam' project!

மதுரை, மாவட்ட விவசாயிகள் இ நாம் திட்டத்தில் விளைபொருட்களை விற்பனை செய்து பயன்பெறலாம் என கலெக்டர் சங்கீதா யோசனை தெரிவித்துள்ளார்.

மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி, கல்லுப்பட்டி, மேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இ நாம் எனும் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருளை தேசிய அளவில் சந்தைப்படுத்தி லாபகரமான விலையை பெறலாம்.

கமிஷன் தர தேவையில்லை. விளை பொருட்களுக்கானவிலை, விற்பனை செய்த 48 மணி நேரத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். போட்டி அடிப்படையில் நடப்பதால் வியாபாரிகளுக்கும் தரமான பொருட்கள் கிடைக்கும். எளிய, மின்னணு வடிவில் பரிவர்த்தனை நடப்பதால் அனைவருக்கும் நேரம் மிச்சமாகும்.

மதுரை மாவட்டத்தில், இத்திட்டத்தில் 4320 விவசாயிகளும், 211 வியாபாரிகளும் பதிவு செய்துள்ளனர். இந்நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரை 589 விவசாயிகளின் 2369 டன் விளைபொருட்கள் ரூ.3.59 கோடி மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதில், மேலும் 70 வியாபாரிகளும் பயனடைந்துள்ளனர்.

இத்திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகள் தங்கள்

  • ஆதார் நகல்
  • வங்கி பாஸ் புக் நகல்,
  • அலைபேசி எண்ணுடன் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு வாடிப்பட்டி 87789 81501, மேலூர் 94427 84684, உசிலம் பட்டி 96775 50210, திருமங்கலம் 90251 52075, மதுரை 96763 13578ல் தொடர்பு கொள்ளலாம்.

இ நாம் என்றால் என்ன?

நேஷனல் அக்ரிகல்ச்சர் மார்க்கெட் (eNAM) என்பது ஒரு இந்திய மின்னணு வர்த்தக போர்டல் ஆகும், இது விவசாய விளைபொருட்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய சந்தையை உருவாக்க தற்போதுள்ள APMC மண்டிகளை இணைக்கிறது. சிறு விவசாயிகள் வேளாண் வணிகக் கூட்டமைப்பு (SFAC) இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் eNAM ஐ செயல்படுத்துவதற்கான முன்னணி நிறுவனமாகும்.

மதுரை சந்தைக் குழுவாலை முன்மொழிப்பட்ட விளைப்பொருட்கள்: நெல், உரிக்கப்படாத தேங்காய் மற்றும் சிறுதானியங்கள் ஆகும்.

இ-நாமில் வர்த்தகம் செய்வதன் நன்மைகள் என்ன?

  • வெளிப்படையான ஆன்லைன் வர்த்தகம்
  • நிகழ் நேர விலை கண்டுபிடிப்பு
  • உற்பத்தியாளர்களுக்கு சிறந்த விலை உணர்தல்
  • வாங்குபவர்களுக்கான பரிவர்த்தனை செலவு குறைகிறது.
  • நிலையான விலை மற்றும் நுகர்வோருக்கு கிடைக்கும் தன்மை
  • தரச் சான்றிதழ், கிடங்கு மற்றும் தளவாடங்கள்
  • மேலும் திறமையான விநியோகச் சங்கிலி
  • கட்டணம் மற்றும் விநியோக உத்தரவாதம்
  • பரிவர்த்தனைகளின் பிழை இல்லாத அறிக்கை
  • சந்தைக்கு மேம்படுத்தப்பட்ட அணுகல்

எனவே, மதுரை விவசாயிகள், இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். 

மேலும் படிக்க:

கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் கால்நடை மருத்துவ முகாம்

மீனவர்கள் மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு!

English Summary: Collector calls to sell products in 'E Naam' project! Published on: 19 August 2023, 12:53 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.