72 நாடுகள் பங்கேற்றுள்ள 22 வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழா நேற்று முன் தினம் முடிவடைந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்றன.
காமன்வெல்த் விளையாட்டுகள் (Commonwealth Games)
காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரேநாளில் தங்கம், இரண்டு வெள்ளி, வெண்கலம் என 4 பதக்கங்களை அள்ளியது.
தங்க பதக்கம் : மீரா பாய் சானு
காமன்வெல்த் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் மீராபாய் சானு 201 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார் மீராபாய் சானு. இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் இது இந்தியாவுக்கு முதல் தங்கமாகும்.
வெள்ளி பதக்கம் : சங்கத் மகாதேவ் சர்க்கார், பிந்த்யாராணி தேவி
நேற்று நடைபெற்ற ஆடவருக்கான பளு தூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் சங்கெத் மகாதேவ் சர்க்கார் பங்கேற்றார். 55 கிலோ பளு தூக்கும் பிரிவில் கலந்து கொண்ட அவர், மொத்தம் 248 கிலோ தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்தார். இதன் மூலம் அவர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். பின்னர் மகளிர் பிரிவில் பளுதூக்குதலில் 55 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பிந்த்யாராணி தேவி பங்கேற்றார். இதில் 202 கிலோ எடையை தூக்கி இரண்டாம் இடம் பிடித்த பிந்த்யாராணி தேவி வெள்ளி பதக்கம் வென்றார்.
வெண்கல பதக்கம் : குருராஜ் பூஜாரி
ஆடவருக்கான 61 கிலோ எடை பிரிவில் பளு தூக்குதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் குருராஜ் பூஜாரி கலந்துகொண்டார். அவர் மொத்தம் 269 கிலோ எடையை தூக்கி வெண்கலப்பதக்கம் வென்றார்.
மேலும் படிக்க
டிசம்பரில் 5G சேவை: பிரதமர் மோடி திட்டம்!
ஆசியாவின் பணக்கார பெண்கள் பட்டியல்: முதலிடத்தைப் பிடித்தார் இந்தியப் பெண்!
Share your comments