நிவர் புயல் (Nivar Cyclone) காரணமாக, உயிரிழந்த மாடுகளுக்கு ரூ.30,000, எருதுகளுக்கு ரூ.25,000, கன்றுக்கு ரூ.16,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி (CM Palanisamy) அறிவித்தார்.
நிவாரணம்:
கடலூர் ரெட்டிச்சாவடியில் நிவர் புயலால் சாய்ந்த வாழை மரங்கள், சேதமடைந்த நெற் பயிர்களை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டார் முதல்வர். புயல், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயப் பயிர்கள், கால்நடைகள் (Cattle) உயிரிழப்பு ஆகியவற்றுக்கு அரசு நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினார். இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி நிவர் புயல் நிவாரணங்களை அறிவித்தார்.
முதல்வர் அறிக்கை:
இந்திய வானிலை ஆய்வு மையம் (Indian Meteorological Center) நவம்பர் அன்று இரவு காரைக்கால் – மாமல்லபுரம் அருகில் ‘நிவர்’ புயல் கரையைக் கடக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, பல்வேறு முன்னெச்சரிக்கை (Precautions) நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக, உயிர் சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன. புயல் கரையைக் கடந்தபோது அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினாலும், பெய்த கன மழையினாலும் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர் செய்யும் நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்தியாவசியப் பொருட்கள்:
நிவர் புயல் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் நபர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க, அங்கிருந்து பாதுகாப்பாக (Safety) வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் (Essentials) வழங்கப்பட்டுள்ளன. மேலும், குடும்பம் ஒன்றிற்கு 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர ஒரு கிலோ பருப்பும், சமையல் எண்ணெயும் வழங்க உத்தரவிட்டேன்.
மாடுகளுக்கு நிவாரணம்:
நிவர் புயலின் போது, 61 மாடுகளும், 5 எருதுகளும், 65 கன்றுகளும், 114 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடுகளுக்கு ரூ.30,000, எருதுகளுக்கு ரூ.25,000, கன்றுக்கு ரூ.16,000 மற்றும் ஆடுகளுக்கு ரூ.3,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி (CM Palanisamy) அறிவித்தார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மானிய விலையில் காய்கறி விதைகள்! வீட்டுத் தோட்டம் அமைத்தால், சத்தான உணவு!
காய்கறி கழிவுகளை மாடுகளுக்கு உணவாக்கும் திட்டம் - கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்!
Share your comments