1. செய்திகள்

10, 12 வகுப்புகளுக்குக் கட்டாயம் பொதுத்தேர்வு- அமைச்சர் அறிவிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Compulsory Public Examination for Classes 10 and 12

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடிப் பொதுத்தேர்வு நடை பெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் மூடல் (Closing of schools)

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.சில மாநிலங்களில் கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்கள் மட்டும் நேரடி வகுப்புக்கு வரலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  கூறியதாவது:-

15 - 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவரும் நிலையில் இவ்வாண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நேரடிப் பொதுத்தேர்வு நடைபெறும். இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கு 1.70 லட்சம் மையங்கள் தேவை. இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தேர்ச்சி (Pass)

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.  மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அது மட்டுமல்லாமல் கடந்த முறை அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.

தொற்று குறைந்தது (Infection is minimal)

எனினும் அரசு எடுத்தத் தொடர் நடவடிக்கைகளால், கொரோனா வைரஸ் தொற்று ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

இதையடுத்து கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
எனினும் அதிகரித்துவரும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக, இந்த ஆண்டும் தேர்வு நடைபெறாதோ என்ற சந்தேகம் எழுந்தது. இந்த சந்தேகத்தை தற்போது அமைச்சர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

மேலும் படிக்க...

உடல் ஆரோக்கியமே முக்கியம்- ஈஷா வழங்கும் புத்தாண்டுப் பரிசு!

சிலிண்டர் வைத்திருப்போருக்கு 50லட்சம் வரை காப்பீடு

English Summary: Compulsory Public Examination for Classes 10 and 12 Published on: 04 January 2022, 07:40 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.