ரயில் பயணங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான பயண கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என பார்லிமென்ட் எம்.பி.,க்கள் குழு தெரிவித்துள்ளது. ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகள், கொரோனா பரவல் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
பயண சலுகை (Travel Concession)
இதற்கிடையே அவர்கள் சலுகைகளை தாமாக முன்வந்து கைவிட ஊக்குவிக்கும் திட்டமும் அமல்படுத்தப்பட்டது. இதில், வசதியான மூத்த குடிமக்கள் தங்கள் சலுகைகளை விட்டுக் கொடுத்ததால் ரயில்வேக்கு கணிசமான லாபம் கிடைத்தது.
இந்நிலையில், பார்லி., - எம்.பி.,க்கள் குழு, 4 ஆம் தேதி சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு, கட்டணத்தில் 40 முதல் 50 சதவீதம் வரை சலுகை அளிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் நெருக்கடியின் போது அது நிறுத்தப்பட்டது.
தற்போது இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருப்பதால், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை மீண்டும் அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். குறைந்தபட்சம் 'ஸ்லீப்பர்' மற்றும் 'ஏசி' வகுப்புகளில் பயணிப்போருக்கு சலுகை வழங்க பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கு தரப்படும் சலுகைகளுக்காக, ரயில்வேக்கு ஆண்டுதோறும் 2,000 கோடி ரூபாய் செலவாவது குறிப்பிடத்தக்கது. இதனால், மீண்டும் இத்திட்டம் அமலுக்கு வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க
மூத்த குடிமக்களுக்கு வருமான வரியைச் சேமிக்கும் 4 திட்டங்கள்!
ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் இனி சீனியர் சிட்டிசன்களுக்கு நல்ல காலம் தான்!
Share your comments