காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல்காந்தி அக்கட்சின் சார்பாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு முன்பு பல தரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டு , பின்னர் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க பட்டது.
தேர்தல் அறிக்கை பணி
ஓர் ஆண்டுக்கு முன்பே தேர்தல் அறிக்கைகான பணி தொடங்கபட்டு விட்டது. மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிபதாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதன் படி இவ்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி கூறினார்
தேர்தல் அறிக்கையின் முக்கியம்சங்கள்
-
100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம், 150 நாட்களாக உயர்வு.
-
காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.
-
வறுமையில் வாடும் மக்களுக்கு மாதம் 6000 ரூபாய்.
-
விவாசிகளுக்கு தனி பட்ஜெட்.
-
தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து.
-
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றபடும்.
-
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறைகளை ஒடுக்குதல்.
ப. சிதம்பரம் பேசுகையில், ''வேலைவாய்ப்பின்மை, விவசாயம், தலித் மக்களின் பிரச்சனை, சிறுபான்மையினர் பிரச்சனை, நீண்ட நாட்கள் கோரிக்கையான நீட் தேர்வு ரத்து, போன்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை மனதில் கொண்டு இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டது.
Share your comments