தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான உத்தேசிக்கப்பட்டிருந்த மின் கட்டண உயர்வு குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கோவை, ஈச்சனாரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்த்திக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செவ்வாயிக்கிழமை 22-08-2022 ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் மின்சாரத் துறையில் ஏற்பட்ட இழப்புகள், வட்டிகள் செலுத்தாமல் இருந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின் கட்டண உயர்வு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை, சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் எல்.டி (தாழ்வழுத்தம்) மற்றும் ஹேச்.டி (உயரழுத்தம்) மின்சாரத்தைப் பயன்படுத்தும் சிறு, குறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பில் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் உயர்த்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த மின் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்.
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு தொடர்பாக ஓரிரு நாட்களில் உறுதி செய்யப்பட்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தாக்கல் செய்யப்படும்.
வீடுகளுக்கான மின் கட்டண உயர்வில் மாற்றம் இல்லை.
மேலும், வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட மற்ற வகையான மின் கட்டண உயர்வில் எந்திவித மாற்றமும் இல்லை.
நாட்டியிலேயே முதல் முறையாக ஒரே நிகழ்ச்சியில் 1.07 லட்சம் பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க இருப்பதாக தெரிவித்தார். முதலமைச்சர், அறிவுறுத்தலின்படி முதல்வரை வரவேற்க கொடிகள், தோரணங்கள், அலங்கார வளைவுகள் ஏதும் ஏற்படுத்தப்படவில்லை, மிகவும் எளிமையான முறையில் 1.50 லட்சம் பேர் வரவேற்க உள்ளனர் என்றார்.
ஆய்வின்போது, ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகரக் காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும் படிக்க:
விவசாயிகளுக்கு மானிய விலையில் 4000 பசுக்களை வழங்குகிறது அரசு!
நிலக்கடலையில் புகையிலை வெட்டுப்புழு தாக்குதலுக்கு எளிய தீர்வுகள்!
Share your comments