Paytm மொபைல் ஆப்பில் சமையல் எரிவாயு சிலிண்டர் புக்கிங் செய்தால் கேஷ் பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் மிகக் குறைந்த விலைக்கு சமையல் சிலிண்டர் வாங்க முடியும்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படைபெயடுப்பு காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை, முன் என்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவில் எரிவாயு சிலிண்டர் விலையும் கடுமையாக அதிகரித்து வருகிறது.
இதனால் சிலிண்டர் வாங்குவதற்கே அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும் இச்சூழலில், மக்களின் நிதிச்சுமையைப் போக்கும் வகையில், Paytm நிறுவனம் புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது.
பேடிஎம் சலுகை!
இதன்படி Paytm ஆப் மூலமாக சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு பேடிஎம் நிறுவனம் சிறப்புச் சலுகை வழங்குகிறது. இந்த ஆப் மூலமாக முன்பதிவு செய்தால் உங்களுக்கு 500 ரூபாய் வரையில் கேஷ் பேக் கிடைக்கும். இச்சலுகை டிசம்பர் 31 வரையில் மட்டுமே.
புக்கிங் செய்வது எப்படி?
பேடிஎம் ஆம் மூலமாக முதல் முறையாக சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கும். பேடிஎம் செயலியில் உள்ள ’Book Cylinder’ என்ற வசதியில் சென்று உங்களுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில், பாரத் கேஸ், இண்டேன் மற்றும் ஹெச்பி கேஸ் ஆகிய மூன்று நிறுவனங்களின் பெயர் இருக்கும். அதில் நீங்கள் சிலிண்டர் வாங்கும் நிறுவனத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னர் உங்களது மொபைல் எண் அல்லது எல்பிஜி ஐடி நம்பரைப் பதிவிட்டு proceed கொடுக்க வேண்டும்.
கட்டாயம்
பேடிஎம் செயலியில் சிலிண்டர் புக்கிங் செய்யும்போது, Proceed கொடுப்பதற்கு முன்பாக FIRSTCYLINDER என்ற புரோமோ குறியீடை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு கேஷ் பேக் சலுகை கிடைக்கும். இந்த புரோமோ குறியீட்டைப் பதிவு செய்து முன்பதிவு செய்தால் உங்களுக்கு 30 ரூபாய் வரையில் கேஷ் பேக் கிடைக்கும். எனவே உடனடியாக சிலிண்டர் முன்பதிவுக்கு பேடிஎம் செயலியைப் பயன்படுத்தி கேஷ் பேக் சலுகையைப் பெறுங்கள்.
மேலும் படிக்க...
கொளுத்தும் வெயிலில் வெண்டைக்காய் சாப்பிடக்கூடாதா?
பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?
Share your comments