சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் சிலிண்டர் விலை 875 ரூபாய் 50 காசாக அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை ஒன்றாம் தேதி 25 ரூபாய் விலை அதிகரிக்கப்பட்டது. கடந்த ஒன்றரை மாதத்திற்கு பின் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் விலையை அதிகரித்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள், சமையல் கேஸ் சிலிண்டர் (LPG Cylinder Hike) விலையை மாற்றி அமைக்கின்றன. அதன்படி பிப்ரவரி 4-ம் தேதி 25 ரூபாயும், பிப்ரவரி 15-ம் தேதி 50 ரூபாயும் உயர்த்தப்பட்டது. பிப்ரவரி 25-ம் தேதி மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. அடுத்து மார்ச் மாதம் 1-ம் தேதி 25 ரூபாய் உயர்த்தப்பட்டது.
இதன்படி, ஒரு மாதத்துக்குள் சிலிண்டர் விலை ரூ.125 உயர்த்தப்பட்டது. பின்னர், ஏப்ரல் 1-ம் தேதி சிலிண்டர் விலையில் 10 ரூபாய் குறைக்கப்பட்டது.
இதுபோன்ற சூழ்நிலையில், தற்போது ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்துள்ளன. அதன்படி, சென்னையில் கடந்த மாதம் ரூ.850.50-க்கு விற்கப்பட்ட சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.25 அதிகரித்து தற்போது ரூ.875.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் மூலம் கடந்த 8 மாதங்களில் மட்டும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.165 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது.
எல்பிஜி விலையை எவ்வாறு சரிபார்ப்பது?(How to check LPG price?)
எல்பிஜி சிலிண்டரின் விலையை நீங்கள் சரிபார்க்க நினைத்தாள், இதற்காக நீங்கள் அரசாங்க எண்ணெய் நிறுவனத்தின் இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். இங்கு நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் புதிய கட்டணங்களை வெளியிடுகின்றன. (https://iocl.com/Products/IndaneGas.aspx) இணைப்பில் உங்கள் நகரத்தின் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
Share your comments