1. செய்திகள்

சமையல் எண்ணெய் விலை குறைந்தது, மகிழ்ச்சியில் தமிழகம்!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Cooking oil prices low

தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு சாமானியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் செய்தி வந்துள்ளது. தீபாவளிக்கு முன்னதாக சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், அதானி வில்மர், ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட சமையல் எண்ணெய் நிறுவனங்கள் அவர்களது விலையை குறைத்துள்ளனர்.

எண்ணெய் விலையை குறைத்த நிறுவனங்கள்- Companies that lower oil prices

மற்ற நிறுவனங்களும் விரைவில் விலையை குறைக்கலாம் என்று தொழில்துறை அமைப்பான சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் (SEA) தெரிவித்துள்ளது. ஜெமினி எடிபிள்ஸ் & ஃபேட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Hyderabad), மோடி நேச்சுரல்ஸ் (Delhi), கோகுல் ரீஃபாயில்ஸ் அண்ட் சால்வென்ட்ஸ் லிமிடெட் (sitapur), விஜய் சோல்வெக்ஸ் லிமிடெட் (Alwar) கோகுல் அக்ரோ ரிசோர்சஸ் லிமிடெட் மற்றும் என்கே புரோட்டீன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Ahemadabad), ஆகியவை சமையல் எண்ணெய்களின் (Oil) மொத்த விலையை குறைத்துள்ளன.

பண்டிகை காலத்தில் விலை குறைவு- Cheap during the festive season

பண்டிகைக் காலங்களில் அதிக விலையில் (High Price) இருந்து நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று SEA நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து இந்த நிறுவனங்கள் மொத்த விலையை குறைத்துள்ளன. SEA தலைவர் அதுல் சதுர்வேதி(Atul chaturvedi) கூறுகையில், “தொழில்துறையின் பதில் மிகவும் ஊக்கமளிக்கிறது. இதற்கு முன்பே மொத்த விற்பனையாளர்கள் மொத்த விலையில் டன்னுக்கு ரூ.4,000- 7,000 குறைத்துள்ள நிலையில், மற்ற நிறுவனங்களும் சமையல் எண்ணெய் விலையைக் குறிப்பார்கள் என்றார்”

 

எண்ணெய் விலை மேலும் குறையலாம்- Oil prices may fall further

இந்த ஆண்டு உள்நாட்டு சோயாபீன் மற்றும் நிலக்கடலை பயிர்கள் ஏற்றம் கண்டு வருவதாலும், கடுகு விதைப்பு ஆரம்ப அறிக்கைகள் மிகவும் நன்றாக இருப்பதாகவும், ராப்சீட் மகசூல் எதிர்பார்க்கப்படுவதாகவும் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

இது போன்ற நிலையில் கச்சா எண்ணெய் விலை (Crude Oil) மேலும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் உலக சமையல் எண்ணெய் விநியோகத்தின் நிலைமையும் சீராகி வருகிறது. இதன் காரணமாக சர்வதேச விலை மேலும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க:

அரசு மானியத்துடன் ஒரே ஒரு ஏக்கரில் விவசாயம்! ரூ. 6 லட்சம் வருமானம்

2020-21ஆம் ஆண்டில் ரூ.9,570 கோடி பயிர்க் காப்பீடு

English Summary: Cooking oil prices low, Tamil Nadu people happy! Published on: 03 November 2021, 03:47 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.