நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலை உருவாகி வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.
பாதிப்பு அதிகரிப்பு (Increased vulnerability)
இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரம், பஞ்சாப், தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், மற்றும் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதையடுத்து முக்கிய நகரங்களில் இரவு வேளை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அவசர ஆலோசனை (Emergency consultation)
இந்நிலையில் நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துதல், தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் துரிதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது பிரதமர் மோடி பேசியதாவது,
ஆலோசனைகளைக் கொடுங்கள் (Give suggestions)
சவாலான சூழ்நிலை மீண்டும் உருவாகி வருகிறது. கொரோனாப் பரவல் சூழ்நிலையைக் கட்டுப்படுத்த உங்கள் அனைவரின் ஆலோசனைகளைக் கொடுக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன்.
கவலை அளிக்கிறது (Worries)
கொரோனா பரவலின் இரண்டாவது அலையை நாம் எதிர்த்துப் போராட வேண்டும்.
மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவின் முதல் அலையில் ஏற்பட்ட பாதிப்பை விட அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகவும் கவலையளிக்கும் நிலைமை.
கவலைப்படாத மாநில அரசுகள் (State governments that do not care)
மக்கள் பதட்டமடையாமல் உள்ளனர். பல மாநில அரசுகள் கவலையின்றி மிகவும் சாதாரணமாக உள்ளன. கொரோனாவை எதிர்த்து மீண்டும் போராட வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளது. அனைத்து சவால்கள் இருந்தபோதும், நம்மிடம் அனுபவமும், வளமும், தடுப்பூசியும் உள்ளது.
கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
பரிசோதனை இலக்கு (Experimental goal)
70% ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்வதே நமது இலக்கு. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கட்டும், ஆனால், கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துங்கள். கொரோனா பரிசோதனை மாதிரிகளை சரியாக சேகரிப்பது மிகவும் முக்கியம்.
சரியான நிர்வாகம் மூலம் அது பரிசோதிக்கப்பட வேண்டும். கொரோனா பரவியவர்களைக் கண்டறிதலும், கண்காணித்தலுமே வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான வழிகள்.
இவ்வாறு பிரதமர் கூறினார்.
மேலும் படிக்க...
கொரோனாத் தடுப்பு வழிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்கவும்- தமிழக ஆளுநர் வேண்டுகோள்!
கொரோனா 2வது அலை : தமிழகத்தில் மீண்டும் கட்டுப்படுத்தப்பட்ட பொது முடக்கம் அறிவிப்பு!
தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!
Share your comments