கொரோனா வைரஸ் இரண்டாம் அலை (Second Wave) இந்தியாவில் மிக வேகமாக பரவி, தற்போது தான் அதன் வேகம் குறைந்துள்ளது. மூன்றாம் அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக முன்பே கூறப்பட்டது. இந்நிலையில், 6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை (Third Wave) எதிர்கொள்ளக்கூடும் எனத் தெரிவித்துள்ளார் எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா.
எய்ம்ஸ் தலைவர் பேட்டி
எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா என்டிடிவி-க்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில் அவர், பெரும்பாலான மாநிலங்கள் பொது முடக்கத்திலிருந்து தளர்வுகள் கொடுத்து வருகின்றன. இச்சூழலில், மக்கள் முதல் இரண்டு அலைகளிலும் எவ்விதப் பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. சமூக இடைவெளியை (Social Distance) மக்கள் கடைபிடிப்பதில்லை. முக கவசம் முறையாக அணிவதில்லை. அதனாலேயே, மூன்றாவது அலையை இந்தியா எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி எழலாம்.
மூன்றாம் அலை
6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ளலாம். தேசிய அளவில் இந்த எண்ணிக்கை வெளிப்படையாகத் தெரிய சற்று காலமாகலாம். ஆனால் இப்போதிருந்தே அதன் பாதிப்பு ஆரம்பித்திருக்கும் என்று கருதுகிறேன். மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாவிட்டால், நிச்சயமாக மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாது என கூறினார்.
மேலும் படிக்க
பிரதமரை சந்தித்து 30 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்!
50 % பயணிகளுடன் பேருந்து சேவைக்கு மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை!!
Share your comments