1. செய்திகள்

முழு ஊரடங்கு முடிவுக்கு வருமா? பேருந்துகள் இயக்கப்படுமா?- இன்று அறிவிக்கிறார் முதல்வர்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Will the whole curfew end? Will buses run? - Chief Minister announces today!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், முழு ஊரடங்கு முடிவுக்கு வருமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதேபோல், பேருந்துகள் இயக்கப்படுமா என்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்க உள்ளார்.

கொரோனா 2-வது அலை (Corona 2nd wave)

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தீவிரம் அடைந்தது. அந்த வரிசையில் தமிழகத்திலும், கொரோனா பாதிப்பு நாள்தோறும் 30 ஆயிரத்தைக் கடந்தது.

பரவல் தடுப்பு (Prevention of spread)

இதையடுத்து, பரவல் தடுப்பு நடவடிக்கையாக, இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, தளர்வுகள், கொரோனாத் தடுப்பூசி என பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசும் முழுவீச்சில் மேற்கொண்டது.

ஊரடங்கால் நன்மை (Curvature benefit)

அந்த வகையில், ஊரடங்கு ஜூன் 21-ந்தேதி )(நாளை) வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு எதிரொலியாக மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்திற்கும் கீழ் இறங்கியது.

முதல்வர் ஆலோசனை (CM Disscussion)

எனவே அடுத்ததாக நாளை முதல் ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா? மேலும் என்னென்ன தளர்வுகளைக் கொடுக்கலாம்? என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

கருத்துகள் கேட்பு (Comments are welcome)

இதில் தற்போதுள்ள தொற்றின் நிலை, மேலும் தளர்வுகளை அளிப்பது, கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் தொற்று குறைந்து வரும் மாவட்டங்களை தேர்வு செய்து அங்கும் பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அனுமதிக்கலாம் என்றும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

இன்று அறிவிப்பு (Announcement today)

இந்த கூட்டத்தில் எடுத்துள்ள முடிவின் அடிப்படையில், தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு உத்தரவு பற்றிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.

பேருந்து போக்குவரத்து (Bus transport)

இந்த தளர்வுகளில் கொரோனாத் தொற்று பாதிப்பு குறைந்து வரும் மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து தொடங்குவது குறித்த அறிவிப்பு இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...

8 ஆசிய சிங்கங்களுக்கும் கொரோனா- தனி கூண்டில் தனிமைப்படுத்தப்பட்டன!

கொரோனா நோயாளிக்கு திருமணம் - கவச உடையில் தாலிக் கட்டிக்கொண்ட மணப்பெண்!

பக்தர்களுக்கு Mask பிரசாதம் - களைகட்டும் துர்க்கை கோவில்!

English Summary: Will the whole curfew end? Will buses run? - Chief Minister announces today!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.