1. செய்திகள்

ஆகஸ்ட்டில் கொரோனா 3-வது அலை: அடுத்த 100 நாட்கள் அபாயகரமானது!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Corona 3rd wave in August: The next 100 days are dangerous!

கொரோனா 3வது அலை காரணமாக அடுத்த 100 நாட்கள் ஆபத்து நிறைந்ததாக, அபாயகரமானதாக இருக்கும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா (Corona)

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நூற்றுக்கணக்கானோர் பலியான நிலையில், லட்சக்கணக்கானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கொரோனா முதல் அலை உச்சத்தில் இருந்தது. ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக செப்டம்பர் மாதத்துக்குப் பிறகுக் கொரோனாத் தாக்கம் குறையத் தொடங்கியது.

மே மாதம் உச்சம் (Peak in May)

இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை பரவியது. மே மாதம் கொரோனா தாக்கம் உச்சத்தை தொட்டது. ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நிரம்பி வழிந்தது. ஆக்சிஜன் படுக்கைகளுக்கும் தட்டுப்பாடு நிலவியது.

படிப்படியாகக் குறைந்தது (Gradually decrease)

இதையடுத்து இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என மத்திய மற்றும் மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதன் பயனாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்துள்ளது. இந்தியாவில் தற்போது தினசரி பாதிப்பு 40 ஆயிரத்துக்கு கீழே வந்தது. தமிழகத்தில் பாதிப்பு 2ஆயிரத்து 500க்கும் கீழ் இறங்கியது.

இயல்புவாழ்க்கை (Normal life)

ஆனாலும் கொரோனா பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. பல மாநிலங்களில் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்ப்பட்டுள்ளதால் மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

மருத்துவர்கள் எச்சரிக்கை (Doctors warn)

கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்க நாடு முழுவதும் இதுவரை 36 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். எனவே இந்தியாவில் கொரோனா 3-வது அலை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆகஸ்ட் இறுதியில் (At the end of August

அடுத்த மாதம் இறுதியில் கொரோனா 3-வது அலை தொடங்கும் என்றும் கொரோனா வைரஸ் முன்பைவிட இனி கூடுதல் வீரியத்துடன் இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அடுத்த 100 நாட்கள் (Next 100 days)

கொரோனா 3-வது அலை பரவும் அபாயம் இருப்பதால் அடுத்த 100 நாட்களும் நமக்கு மிகவும் முக்கியமானவை. இந்த 100 நாட்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியாவில் கொரோனா தொற்றால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால்தான் 3-வது அலை வருவது குறித்த கேள்வி எழுகிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் உலகம் 3-வது அலையை நோக்கி நடைபோட்டு வருகிறது. நாட்டு மக்கள் வைரசால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர்.

தடுப்பூசி (Vaccine)

ஒட்டு மொத்த நோய் எதிர்ப்பு திறனை நாம் இன்னும் பெறவில்லை. தடுப்பூசி திட்டத்தால் மக்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

மேலும் நாம் இன்னும் முழுமையாக தடுப்பூசி போட்டு முடிக்கவில்லை. எனவே தீவிர தடுப்பூசி திட்டத்தை தொடங்கி உள்ளோம். அதிக பாதிப்புக்குள்ளாகக் கூடிய 45 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.

உயிரிழப்பு குறையும் (Mortality will decrease)

இதன் மூலம் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும். ஆனால் மற்றவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 3-வது அலை தாக்கும் அபாயம் இருப்பதால் அடுத்து வரும் 100 முதல் 125 நாட்கள் மிகவும் முக்கியமானவை. இந்த நாட்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை நாம் முழுமையாக பின்பற்றினால் 3-வது அலை தாக்குவதை தடுக்க முடியும். அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்கு தடுப்பூசி திட்டத்தை நாம் தீவிரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணைச் செயலாளர் லவ் அகர்வால் கூறியதாவது:-

10%க்கு மேல் (More than 10%)

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ள போதிலும் சில பகுதிகளில் பாதிப்பு தொடர்ந்து கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. மணிப்பூர், கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 47 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் விகிதம் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

முகக்கவசம் (Mask)

73 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ தாண்டி வருவதற்கு, கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றாததே காரணம். முகக்கவசம் அணிவது வெகுவாக குறைந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
முகக்கவசம் அணிவதை நமது வாழ்வின் புதிய வழக்கமாக கடைபிடிக்க வேண்டும். மேலும் 2 அடி சமூக இடைவெளி மேற்கொள்வதையும், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதையும் நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு லவ் அகர்வால் கூறினார்.

இதனிடையே புதுவையில் குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். இதனால் புதுவையில் பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,776 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 171 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,657 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 1,170 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குழந்தைகள் (Children)

புதுவையில் 15 குழந்தைகள் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டனர். அதில் 11 குழந்தைகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 5 வயதுக்கு கீழ் 8 பேருக்கும், 5 வயதிற்கு மேல் 3 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளின் தாயார் 3 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

27 மாவட்டங்களில் திங்கட்கிழமை முதல் மாவட்டத்திற்குள் - மாவட்டங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்து

English Summary: Corona 3rd wave in August: The next 100 days are dangerous! Published on: 17 July 2021, 07:55 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.