தமிழகத்தில் ஒரே நாளில் 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டு உள்ளது. 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா 3-வது அலை (Corona 3rd wave)
கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் 3 வது அலையாகப் படுவேகமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. பரவலைக் கட்டுப்படுத்த ஏதுவாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு உள்ளிட்டப் பல்வேறுக் கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு படுவேகமாகப் பரவி வருகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
23,459 பேர்
தமிழகத்தில் 1,53,046 மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா வைரஸ் பரவல் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 23,438 பேர், வங்கதேசத்திற்கு சென்று திரும்பிவர்கள் 9 பேர், உக்ரைன், ஐக்கிய அரபு எமிரேட் சென்று திரும்பியவர்கள் தலா ஒருவர் மற்றும் மேற்குவங்கம், கர்நாடகம், உ.பி., தலா 2 பேர் பீஹார், சிக்கிம், திரிபுரா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவர் என மொத்தம் 23,459 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,91,959 ஆக அதிகரித்து உள்ளது. 9,026 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,36,986 ஆக உயர்ந்துள்ளது.
26 பேர் பலி
26 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,956 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை (Chennai)
சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 13ம் தேதி 8,218 ஆக இருந்த நிலையில் 14 ம் தேதி 8963 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க...
Share your comments