இந்தியாவை உலுக்கி வரும் கொரோனா வைரசின் 2வது அலை, மே மாதத்தின் நடுப்பகுதியில் அல்லது இறுதியில் இருந்துக் குறையத் துவங்கும் என வைராலஜிஸ்ட் மருத்துவர் ககன்தீப் காங் கணித்துள்ளார்.
கொரோனா 2-வது அலை (Corona 2nd wave)
இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா 2-வது அலை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோரைச் சூறையாடி வருகிறது.
உயிர்பலி ஒருபுறம், தொற்று பரவல் மறுபுறம், தடுப்பூசி போடும் பணிகள் இன்னொரு புறம் எனக் கொரோனா சக்கைபோடு போட்டு வருகிறது.
ஊரடங்கு (Curfew)
தொற்றுப் பரவலைத் தடுக்க ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கைக் கையில் எடுத்துள்ளன. தமிழகத்தில் ஞாயிறு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்டவற்றின் மூலம் தொற்றுப் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வைராலஜிஸ்ட் கணிப்பு (Virologist prediction)
இதுதொடர்பாக, வேலூரை தளமாகக் கொண்ட கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் பேராசிரியரும், பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசுகளின் கொரோனா தொற்று தடுப்புக் குழுவின் ஆலோசகராகவும் உள்ள வைராலஜிஸ்ட் ககன்தீப் காங் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் தற்போது மிகவும் தீவிரமாக இருக்கும் கொரோனா வைரசின் 2வது அலை மே மாதம் நடுப்பகுதி அல்லது இறுதியிலிருந்து படிப்படியாகக் குறையத் துவங்கும் என, கணித்துள்ளோம்.
படிப்படியாகச் சரியும் (Gradually Decreasing)
ஜூன் மாதம் முதல்வாரத்தில் இருந்துதான் கொரோனாப் பாதிப்பு குறையத் துவங்கும் என, வேறு சில அமைப்புகள் கணித்துள்ளன. ஆனால், சில காரணங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் நாங்கள் கணித்த வகையில் மே மாதம் நடுப்பகுதி அல்லது இறுதியிலிருந்து பாதிப்பு படிப்படியாக சரியத் துவங்கும்.
சிறப்பான செயல்பாடு (Excellent functionality)
தற்போது இந்தியர்களுக்குக் கிடைத்திருக்கும் கோவிஷீல்ட், கோவாக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளுமே கொரோனா தொற்றுக்கு எதிராகச் சிறப்பாக செயல்படுகின்றன.
நல்ல பாதுகாப்பை அளிக்கின்றன. நோய் தொற்று ஏற்படுவதிலிருந்து பெரும்பாலும் காக்கின்றன.
பரவல் இருக்காது (There will be no spread)
மக்கள் வைரசில் பாதிக்கப்படுவதிலிருந்து காத்துக்கொண்டாலே, மற்றவர்களுக்கு உங்களால் நோயைப் பரப்பமுடியாது.
முழு ஊரடங்கு உதவும் (The whole curfew will help)
தற்போது நாள்தோறும் ஏறக்குறைய 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இப்போதுள்ள சூழலில் கொரோனா வரைஸ் பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு சிறப்பாக உதவும்.
இவ்வாறு ககன்தீப் காங் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
ரூ.4000 கொரோனா நிவாரண நிதிவழங்கும் திட்டம் - நாளை ஸ்டாலின் முதல் கையெழுத்து!
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை!
சில மாதங்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும்! சீரம் அதிகாரி அதிர்ச்சி தகவல்!
Share your comments