கொரோனா தொற்றுக்கு நீண்ட நாட்கள் சிகிச்சை எடுத்து குணமடைந்தவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால், தொடர் மருத்துவ பரிசோதனைகள் செய்வது அவசியம் என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
துவம்சம் செய்யும் கொரோனா (Initial corona)
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளைக் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா என்றக் கொலைகாரக் கொடூர வைரஸ், அதிரடியாகத் தாக்கித் துவம்சம் செய்து வருகிறது.
அதிலும் கொரோனா 2-வது அலை, குத்துயிரும், கொலை உயிருமாக, வயதானவர்கள், இளம் வயதினர் எனப் பாகுபாடின்றி, தம்மால் முடிந்தவரை, அள்ளிச் செல்கிறது.
உயிர்பிழைப்பது சவால் (Survival is the challenge)
ஆகத் தற்போது, கொரோனாவில் சிக்காமல், உயிர்பிழைப்பது என்பதே சவாலானதாக மாறிவிட்டது.
கட்டுப்பாட்டில் இல்லை (Not in control)
இது ஒருபுறம் என்றால், கொரோனாவில் சிக்கி மீண்டவர்கள் நிலைமை மிகவும் கொடுமையானதாக உள்ளது. சுமார் 6 முதல் 8 மாதங்கள் வரை, கொரோனாவில் இருந்து மீண்டவர்களது உடல், அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்காது.
உடல் உபாதைகள் (Physical abuse)
ஒரு முறை பாதிக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் வாதிக்கப்படும் வாய்ப்பு என்பது மற்றொரு பாதிப்பு. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு, சில நாட்களுக்கு பின் வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
கவனம் அவசியம் (Attention is essential)
அதிலும் குறிப்பாக, கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகி, நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருந்தவர்கள், குணமடைந்த பின் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
இது குறித்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அதுல் இன்கேல் கூறியதாவது:
சிறுநீரகக்கோளாறு (Kidney disease)
கொரோனாவுக்கு நீண்ட நாட்கள் சிகிச்சை எடுத்துக் குணமடைந்தவர்களுக்கு, ஆறு மாத காலத்திற்குள் சிறுநீரக கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அறிகுறிகள் இல்லை (No symptoms)
சிறுநீரக கோளாறுகளில் அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை.
டயாலிசிஸ் (Dialysis)
ஆறு மாதங்களுக்கு பின், பரிசோதனை மேற்கொள்ளும் போது, 'டயாலிசிஸ்' செய்ய வேண்டிய அளவுக்கான தீவிர பாதிப்பு நிலைக்கு சிலர் தள்ளப்படுகின்றனர்.
தொடர் மருத்துவப் பரிசோதனை (Continuous medical examination)
எனவே, நீண்ட நாள் சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள், தொடர் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
மன அழுத்தத்தை குறைக்கிறது விட்டமின் சி நிறைந்த பழங்கள்
வறட்சியிலும் நாவல் பழம் விளைச்சல்! விவசாயிகள் மகிழ்ச்சி!
Share your comments