கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடு செய்ய இந்தியாவுக்கு 13 ஆண்டுகள் ஆகலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி மேலும் கூறியதாவது: இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் கோவிட் பரவல் காரணமாக ரூ 52.5 லட்சம் கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
பொருளாதார இழப்பு (Economical loss)
2020-21ம் ஆண்டில் ரூ19.1 லட்சம் கோடியும், 2021-22ம் ஆண்டில் ரூ17.1 லட்சம் கோடியும், 2022-23ம் ஆண்டில் ரூ16.4 லட்சம் கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார இழப்பை ஈடு செய்வதற்கு மேலும் 13 ஆண்டுகள் ஆகலாம், என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் உலகத்திற்கே இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம், டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடந்த சீக்கிய குழுவினர் கூட்டத்தில் இதை அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை ஈடு செய்ய 13 ஆண்டு காலம் ஆகும் என்றால், அதுவரையிலான இடைப்பட்ட காலத்தில் பொருளாதாரம் உயர் வாய்ப்பு இருக்குமா என்று கேள்வி எழுகிறது. ஆனால், கொரோனா ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் குறையாதது வருந்தத்தக்கது.
மேலும் படிக்க
தொழில் முனைவோருக்கு புதிய செயலி: ஐசிஐசிஐ வங்கி அசத்தல்!
தடுப்பூசி செலுத்தியதில், உலகத்திற்கே இந்தியா முன்னுதாரணம்: பிரதமர் மோடி பெருமிதம்!
Share your comments