கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸால் (Corona Virus) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஊரடங்கு தான்.
கொரோனா தொற்று குறைவு
நாட்டில் கொரோனா தொற்று உறுதியாகும் விகிதம் 4.66 சதவீதமாகச் சரிந்துள்ளது. தொற்றிலிருந்து மீள்வோர் விகிதம் 94.55 சதவீதமாக உயர்ந்துள்ளது என, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் 57 நாட்களுக்குப் பின், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 13 லட்சத்திற்கும் கீழ் (12,31,415) சரிந்துள்ளது. சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 72,287 பேர் குறைந்துள்ளனர்.
ஒரு நாள் பாதிப்பு குறைவு
ஒரு நாள் பாதிப்புகளின் எண்ணிக்கை 2வது நாளாக ஒரு லட்சத்திற்கும் குறைவாக ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 92,596 பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 2,75,04,126 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 27வது நாளாக தினசரி புதிய பாதிப்புகளை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தேசியளவில் குணமடைபவர்களின் விகிதம் 94.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. வாராந்திர தொற்று உறுதி வீதம் 5.66 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 16-வது நாளாக அன்றாட பாதிப்பு வீதம் 10 சதவீதத்துக்கும் குறைவாக, 4.66 சதவீதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
ஆபத்து அதிகமுள்ள புதிய வைரஸ் இந்தியாவில் கண்டுபிடிப்பு!
நோய் எதிர்ப்பு சக்தியில் கோவேக்சினை மிஞ்சியது கோவிஷீல்டு தடுப்பூசி - ஆய்வில் கண்டுபிடிப்பு!
Share your comments