தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 34,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியாளவில் தொடர்ந்து 6-வது நாளாகப் பாதிப்பு குறைந்து வருகிறது.
35 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34,875 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இருப்பினும் 365 பேர் உயிரிழந்து உள்ளனர். 23,863 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 70,355 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 34,875பேருக்கு கொரோனா உறுதியானது. அதில், 8 பேர், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், 33,867பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,99,225 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,56,04,311 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
365 பேர் கொரோனா பாதிப்பால் மரணம்
365 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 178 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 187 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18,734 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்தியளவில் இன்று 6-வது நாளாக கொரோனா தொற்று பாதிப்பு 3 லட்சத்துக்குக் கீழ் பாதிப்பு குறைந்து உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒரு நாளில் நாட்டில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 334 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகினர். இதன் மூலம் நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 54 லட்சத்து 96 ஆயிரத்து 330 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் 4,529 பேர் மரணம்
அதேவேலையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இது வரை இல்லாத வகையில் 4,529 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 83 ஆயிரத்து 248 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் புதிதாகத் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் குறைந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
ஊரடங்கு மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்படலாம்- தளர்வுகளுக்கு வாய்ப்பு இல்லை!
Share your comments