நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாடாய் படுத்தி வரும் நிலையில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகளும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. வைரஸுக்கான தடுப்பூசிகள், ஜனவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்’ என மத்திய அரசு முன்னர் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்திருக்கும் `கோவேக்சின்’ தடுப்பு மருந்துக்கும், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்திருக்கும் `கோவிஷீல்டு’ தடுப்பு மருந்துக்கும் இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு மையம் அனுமதி தர பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
தடுப்பூசி ஒத்திகை
இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை குழப்பம் இன்றி விரைவாக கொண்டு சென்று மக்களுக்கு செலுத்துவதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் இன்று இரண்டு மணி நேரம் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 116 மாவட்டங்களில் 259 மையங்களில் ட்ரை ரன் எனப்படும் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது .
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 17 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி இலவசம்
டெல்லியில் உள்ள ஒரு மையத்தில் தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் ஆய்வு செய்தார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும்போது, மக்களுக்கு அதைச் செலுத்துவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைத் தெரிந்துகொள்வதற்காகவே இந்த ஒத்திகை நடைபெற்றது என்றார். மேலும், நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்றும் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
தோட்டக்கலைப் பயிர்களில் நுண்ணீர் பாசனம் அமைக்க மானியம் - விண்ணப்பிக்க அழைப்பு!!
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வான் சாகசம் செய்த NRI பெண்!
துத்தநாக சத்துப் பற்றாக்குறையைப் போக்கும் ஜிங்க் சல்பேட்- விவசாயிகள் கவனத்திற்கு!
Share your comments