சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) தனது தடுப்பூசி கோவிஷீல்டு ஒரு டோஸ், மாநில அரசுகளுக்கு ரூ. 400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ .600 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறன்றன.
18 வயதிற்கு மேற்பட்டோருக்கு (For those over 18 years of age)
இதன் ஒருபகுதியாக, மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
விலை உயர்வு (Increase in price)
இந்த நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) தனது தடுப்பூசி கோவிஷீல்டு ஒரு டோஸ், மாநில அரசுகளுக்கு ரூ. 400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ.600 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
ரூ.150க்கு விற்பனை (Selling for Rs.150)
தற்போது, புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் மத்திய அரசுக்கு ரூ.150 விலையில் விற்பனை செய்கிறது.இவை நிறுவன விற்பனையின் விலை, அதிகபட்ச சில்லறை விலை அல்ல, அவை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (Serum Institute of India) நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை உயர்வு விஷயத்தில் கூடுதல் தெளிவு வேண்டும் மருத்துவமனைகள் காத்திருப்பதாகவும், நுகர்வோர் ஏற்க வேண்டிய இறுதி விலை ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெரும் இழப்பு (Great loss)
பொதுவாக, மருந்து நிறுவனங்கள் ஒரு வர்த்தக சேனல் மூலம் மருத்துவமனைகளுக்கு மருந்துகளை விற்கின்றன. இது விலையில் 10-15 சதவீத வித்தியாசத்தைக் கொண்டுள்ளது.
இதுகுறித்து SII தலைமை நிர்வாக அதிகாரி அதர் பூனவல்லா (Adar Poonawalla) கூறுகையில்,
மத்திய அரசுக்கு ஒரு டோஸுக்கு ரூ .150 என்ற விலையில் விற்பனை செய்வதால், பெரும் தொகையை நாங்கள் இழக்க வேண்டியிருக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் (Corporate companies)
நாங்கள் 50 சதவீத விலையை அஸ்ட்ராசெனெகாவுக்கு (AstraZeneca) ராயல்டியாக (Royalty)செலுத்த வேண்டும். 45-60 வயதிற்குட்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம். நாங்கள் இன்னும் பலருடன் கூட்டாகச் சேர்ந்து பணியாற்ற ஆராய்வோம். கார்ப்பரேட்டுகள் தங்கள் அலுவலகங்கள் அல்லது ஆலைகளில் தேவையான உள்கட்டமைப்பை வழங்கினால், நாங்கள் தடுப்பூசி வேகத்தை அதிகரிக்க முடியும்.
விரைவில் ஒப்பந்தம் (Deal soon)
இன்னும் ஓரிரு வாரங்களில் தனியார் மருத்துவமனைகளுடனான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது தொடங்கும் என்றும், மே 3 அல்லது 4-வது வாரத்திற்குள் தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிகிறது.
100 மில்லியன் வரை (Up to 100 million)
எஸ்ஐஐ தற்போது ஒவ்வொரு மாதமும் 65-70 மில்லியன் டோஸ் கோவிஷீல்ட்டை தனது புனே ஆலையில் தயாரித்து வருகிறது. மேலும் அதை 100 மில்லியன் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நிலைமை சிக்கலாகவும் மற்றும் அவசரமாக உள்ளதால், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனியாகத் தடுப்பூசி வழங்குவது சவாலானது.
4-5 மாதங்களுக்குப் பிறகு, சில்லறை மற்றும் தடையற்ற வர்த்தகத்தில் தடுப்பூசிகள் சந்தையில் கிடைக்கும்.
இவ்வாறு அதர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
கொரோனாப் பற்றி வதந்தி பரப்பினால் ரூ.20 கோடி அபராதம்!
கொரோனா 2வது அலை : ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு நோய் தொற்று உறுதி!
Share your comments