சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளை செயல்பட்டு வருகிறது. சனிக்கிழமை நேற்று (ஜூன் 4) நடைப்பெற்ற பருத்தி ஏலத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, மாவட்ட விவசாயிகள் மற்றும் சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டனர்.
பருத்தி ஏலம் (Cotton Auction)
பருத்தி ஏலத்தில் சுமார் 1550 பருத்தி மூட்டைகள் விவசாயிகளால் கொண்டவரப்பட்டு மொத்தம் 400 தொகுப்புகளாக வைத்து ஏலம் விடப்பட்டது. BT ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 9369 முதல் அதிக பட்சமாக ரூபாய் 11440 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
DCH பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூபாய் 8800 ரூபாய் முதல் அதிகப்பட்சமாக 12109 ரூபாய் வரையிலும் விலை விற்று தீர்ந்து மொத்தம் 55 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைப்பெற்றது.
அடுத்த ஏலம் ஜூன் 6ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
உர விற்பனை நிறுவனத்தின் காசோலை மோசடி: தோனி மீதும் வழக்குப் பதிவு!
Share your comments