பஞ்சு விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது; தற்போது, ஒரு கேண்டி 81 ஆயிரம் ரூபாயை தொட்டுள்ளது. தமிழக நுாற்பாலைகள், குஜராத், தெலுங்கானா உள்பட வெளிமாநிலங்களில் பஞ்சு கொள்முதல் செய்து, அனைத்து நுால் ரகங்களையும் தயாரிக்கின்றன. முன் எப்போதும் இல்லாத வகையில், நடப்பு சீசனில், பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. கடந்த 15 மாதங்களில், கிலோவுக்கு 100 ரூபாய் ஒசைரி நுால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஆடை தயாரிப்பு செலவு அதிகரிப்பு, வர்த்தகரிடமிருந்து புதிய ஆர்டர்களை பெறமுடியாமை, நடைமுறை மூலதன தேவை அதிகரிப்பு என, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.
பஞ்சு விலை உயர்வு (Cotton price raised)
யூக வணிகமே பஞ்சு விலை உயர்வுக்கு காரணம் என, ஜவுளித்துறையினர் குற்றம்சாட்டி வருகின்றனர். நுால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவேண்டும்; இறக்குமதி பஞ்சுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பொங்கலுக்கு முன்புவரை, ஒரு கேண்டி (355.62 கிலோ) 76 ஆயிரம் ரூபாயாக இருந்த பஞ்சு விலை, தற்போது 81 ஆயிரத்தை தொட்டுள்ளது. இது, ஒட்டுமொத்த ஜவுளித்துறையினரையும் கதிகலங்கச் செய்துள்ளது. பஞ்சு விலை அதிகரிப்பால், நுால் விலை குறைய வாய்ப்பில்லை. மாறாக, வரும் பிப்ரவரியில் 1ல், நுால் விலை மேலும் உயர்ந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பஞ்சு விலை உயர்வால் பின்னலாடைத் தொழில் துறை கவலையில் உள்ளது. அரசு உடனடியாக தலையிட்டு, வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பது அனைவரது வேண்டுகோளாக உள்ளது.
மேலும் படிக்க
வேளாண் விளைபொருள் பட்டியலில் இருந்து பருத்தி நீக்கம்: அதிர்ச்சியில் விவசாயிகள்
கார் வாங்க வந்த விவசாயி: ஏளனம் செய்து விட்டு மன்னிப்பு கேட்ட ஊழியர்!
Share your comments