தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) 2020 ஆம் ஆண்டுக்கான, இளங்கலை பட்டப்படிப்பு (B.Sc. Agri) மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு வரும் 26ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்தாய்வு 26ம் தேதி முதல் 28.11.2020 வரை (நாட்கள்) இணையதளம் வாயிலாக நடத்தப்படும் என்று பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைப்பிரிவு முதன்மையர் முனைவர் மா. கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.
அதன்படி
-
தனை தொடர்ந்து 30.11.2020 மற்றும் 12.2020 ஒதுக்கட்டிற்கான கலந்தாய்வு பாடப்பிரிவுகள், மாற்றத்திற்னாளிகளுக்கான சிறப்பு இடஒதுக்கீடு, முன்னாள் இராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு நடத்தப்படும்.
-
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கீடு 02.12.200 அன்று இணையதளம் வாயிலாக அறிவிக்கப்படும்.
-
மாணவர்களின் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கான நேரம் மாணவர்கள் பதிவு செய்த மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண் மூலம் தெரிவிக்கப்படும்.
-
தொடர்ந்து, 07.12.2020 முதல் 12.12. 2020 வரை சான்றிதழ் சரிபார்ப்புக்காக ஒவ்வொரு நாளும் 600 மாணவர்கள் அழைக்கப்படுவார்கள்.
-
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் தற்காலிக இடஒதுக்கீட்டு கடிதம் வழங்கப்படும்.
-
பட்டயப் படிப்புக்கான நேரடிக் கலந்தாய்வு 3.12.2020 முதல் 6.12.2020 வரை நடைபெறும்.
-
பட்டப்படிப்பு (பொதுப்பிரிவு மற்றும் சிறப்பு இடஒதுக்கீடு) மற்றும் பட்டயப்படிப்பு அனைத்து குறித்த விபரங்களையும் https://tnauonline.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
-
மாணவர் மற்றும் பெற்றோர் வருகையின் போது கொரானா தொற்று பரவலை தடுக்கும் முயற்சியாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து தேவையான ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
-
சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்கு வசதியாக நாள் ஒன்றுக்கு 600 மாணவர்கள் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க...
எப்போது மின்னல் தாக்கும்?- தெரிந்துகொள்ள Damini-App
கூடுதல் மகசூலுக்கு பறவைகளும் முக்கியமே !
பயிருக்கு உயிரூட்டும் தயிர்- பொன்னியமாக மாற்றி யூரியாவிற்கு பதிலாக பயன்படுத்தலாம்!
Share your comments