கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முழுவதும் 7.3 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்குத் தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா மேலும் ஒரு குறிப்பிடத்தக்கச் சாதனையை படைத்துள்ளது.
கொரோனா தொற்று (Corona infection)
கடந்த ஆண்டு நம்மை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தொற்று இன்னும் நம்மை விட்டு ஒழிந்தபாடில்லை. தொற்று பரவல் ஓரளவுக்கு ஓய்ந்ததே என நாம் நிம்மதி அடைந்தநிலையில், தற்போது 2-வது ரவுண்டிற்குத் தயாராகிவிட்டது. குறிப்பாக மகாராஷ்டிரா போன்ற வடமாநிலங்களில் இந்த தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுஒருபுறம் இருக்க, கொரோனாத் தடுப்பூசியும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஏராளமானோர் ஆர்வத்துடன் இந்தத் தடுப்பூசியைப் போட்டு வருகின்றனர்.
7.3 கோடி பேருக்குத் தடுப்பூசி (Vaccination for 7.3 crore people)
இவ்வார இறுதிவரை 11,53,614 முகாம்களில் 7,30,54,295 பயனாளிகளுக்குக் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தொற்று பரவல் அதிகரிப்பு (Increased spread of infection)
இந்நிலையில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்திஸ்கர், டில்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய எட்டு மாநிலங்களில் அன்றாட கொவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 81.42 விழுக்காடு பதிவாகியுள்ளது
இந்தியாவில் தற்போது 6.58,909 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 5.32 சதவீதமாகும்.
1.15 கோடி பேர் குணமடைந்தனர் (1.15 crore people were cured)
அதேநேரத்தில், நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,15,69,241 ஆக (93.36%) பதிவாகியுள்ளது.
அவசர ஆலோசனை (Emergency consultation)
அன்றாடப் புதிய பாதிப்புகளும் உயிரிழப்புகளும் கடந்த இரண்டுவாரங்களில் அதிகரித்து வரும் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுடன், மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா அவசர ஆலோசனை நடத்தி அங்குள்ள சூழல் குறித்துக் கேட்டறிந்தார்.
மேலும் படிக்க...
கொரோனாப் பரவலைத் தடுக்கக் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்- தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
Share your comments