தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக கடலுார், திருவண்ணாமலை, வேலுார், காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்ப்டுள்ளது. புயலின் போது பெய்த கன மழை மற்றும் சூறாவளி காற்றால் பல பகுதிகளில் விவசாயி நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நெல், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு, வாழைப்பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. இதனை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பயிர் சேதம் கணக்கெடுப்பு
மாவட்ட வாரியாக பயிர் சேதம் குறித்து வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய துவங்கியுள்ளனர். கடலுார் மாவட்டத்திற்கு சென்ற வேளாண்துறை செயலர் ககன்தீப்சிங்பேடி, பயிர் சேதங்களை பார்வையிட்டார். திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்ற வேளாண்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, பயிர் சேதங்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். அப்போது சேதம் அடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தருவதாகவும் கூறினார்.
இதேபோல், டெல்டா மாவட்டங்களுக்கு சென்ற, தோட்டக்கலைத்துறை இயக்குனர், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களின் சேதங்களை ஆய்வு செய்தார்.
பயிர் சேதம் குறித்த முதற்கட்ட கணக்கெடுப்பை இன்று முடித்து, அறிக்கை அனுப்பும்படி, அனைத்து மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர்கள், தோட்டக்கலை துறை துணை இயக்குனர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பயிர் சேத கணக்கெடுப்பு தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும் படிக்க...
நிவர் புயல் எதிரொலி : சூறைக்காற்றில் சிக்கிய வேளாண் பயிர்கள் - விவசாயிகள் வேதனை!!
உழவர் -அலுவலர் தொடர்புத் திட்டம் சேலத்தில் அறிமுகம்!!
மானியத்தில் திறந்தவெளி கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம்!!
Share your comments