தமிழக சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ், பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து, அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு வெளியீட்டார்.
கடந்த ஆண்டு (2020-21) பயிர்க்கடன் வழங்குவதற்கு ரூ.11,000 கோடி குறியீடு நிர்ணயிக்கப்பட்டது. இதில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பயிர்க்கடன் வழங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட குறியீடு ரூ.746 கோடி மற்றும் ரூ.534 கோடி ஆகும். இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எய்தியது ரூ.614.92 மற்றும் ரூ.502.62 கோடி ஆகும் என்பது குறிப்பிடதக்கது.
மேலும், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் விவசாயிகள் தங்களது சுய உறுதிமொழியில் கூடுதலான பரப்பில் பயிர் செய்து வருவதாக கூறுகின்றனர். இந்த விவரங்கள், அரசு விவரங்கள் அடங்களுக்கு மாறாக உள்ளது.
இது போன்ற விதிமீறல்கள் பிற மாவட்டங்களில் நடைபெற்றிருந்தாலும், இவ்வகையான 2 விதிமீறல்களில் 97 சதவீதம் அதாவது மொத்தம் ரூ.516.92 கோடியில் ரூ.501.69 கோடி இவ்விரு மாவட்டங்களில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
இந்நிலையில், விவசாயிகளுக்கு கடன் வழங்கும் பணியானது, அதிக முக்கியத்துவம் வாய்ந்த பணியாக இருப்பதால், விதிகளின்படி கடன் வழங்க வேண்டியது சங்கத்தின் பணி என்பதையும் கருத்தில் கொண்டு இவ்வகையான விதிமீறல்கள் இனி நடைபெறாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை உறுதி செய்து, விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்நிகழ்வினை சிறப்பினமாக கருதி மேற்கூறிய விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி சான்றினை வழங்கலாம் எனவும் அறிவித்தார். மேலும் அவர்களுக்கு மீண்டும் தொடர்ந்து பயிர்க்கடன் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்கள்.
இதனால் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 51,017 விவசாயிகளுக்கு ரூ.501.69 கோடி அளவிற்கு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்பதையும், அவர்களுக்கு நடப்பாண்டில் மீண்டும் பயிர்க்கடன் வழக்கம்போல தொடர்ந்து வழங்கப்படும் என்பதையும் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஐ.பெரியசாமி அறிவிப்பு விடுத்துள்ளார்.
இனி வருங்காலங்களில் இத்தகைய தவறுகள் நிகழாதவாறு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார். இவ்வாறு ஐ.பெரியசாமி, விவசாயி கடன் தள்ளுபடிக்கு உறுதியளித்தார்.
மேலும் படிக்க:
வெப்பமண்டல பகுதியில் ஆப்பிள் விளைச்சல் சாத்தியம்: அறிந்திடுங்கள்
MPKSY: முற்போக்கு விவசாயிகளை கவுரவித்து ரூ.60 லட்சம் மதிப்பில்லான விருது!
Share your comments