1. செய்திகள்

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
Lockdown
Credit : Dinamalar

தமிழகத்தில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும், ஜூலை 31ம் தேதி காலை 6:00 மணி வரை நீட்டிக்கப்படுவதாக, முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) அறிவித்துள்ளார். தமிழகத்தில், கொரோனா நோய் தொற்று பரவல் குறைந்து வருவதால், மாநில அரசு, அவ்வப்போது தளர்வுகளை அறிவித்து வருகிறது. எனினும், நோய் பரவல் தொடர்வதால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

ஆய்வுக் கூட்டம்

அரசு ஏற்கனவே பிறப்பித்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நாளை மறுதினம் காலை, 6:00 மணிக்கு நிறைவடைகிறது. இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் அறிவிப்பு, கொரோனா நோயை முற்றிலும் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். அமைச்சர் சுப்பிரமணியன், தலைமைச் செயலர் இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொற்று நிலையை கண்காணித்து, தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டி இருப்பதால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு (Curfew) வரும், ஜூலை 31ம் தேதி காலை, 6:00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

தொடரும் தடைகள்:

  • புதுச்சேரி தவிர்த்து, மற்ற மாநிலங்கள் இடையே, தனியார் மற்றும் அரசு பஸ் போக்குவரத்து கிடையாது.
  • மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ள, வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்து இல்லை
  • திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள் திறக்கப்படாது
  • சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள் கூடாது
  • பள்ளிகள், கல்லுாரிகள், உயிரியல் பூங்காக்கள் திறக்கப்படாது
  • திருமண நிகழ்வுகளில், 50 பேர்; இறுதி சடங்குகளில், 20 பேர் அனுமதிக்கப்படுவர்.

புதிய தளர்வுகள்:

அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்கள், தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள், 50 சதவீத மாணவர்களுடன், சுழற்சி முறையில் (Shift Basis) செயல்படலாம்

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட, அனைத்து நிர்வாகப் பணிகளும் தொய்வின்றி நடக்க, ஆசிரியர்கள் பணிபுரியலாம்.

மீறினால் அபராதம்!

பொது இடங்களில், முகக்கவசம் (Mask) அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினியால் சுத்தம் செய்வது ஆகியவற்றை, கட்டாயம் பின்பற்ற வேண்டும். தொற்று அறிகுறிகள் தென்பட்டதும், மக்கள் மருத்துவமனைகளை நாடி, மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைப் பெற வேண்டும். விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது, அபராதம் விதிக்க கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க

கொரோனா 3வது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்: WHO எச்சரிக்கை!

கண்ணாடி இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் வாரண்டி ரத்து: ஐகோர்ட் அதிரடி

English Summary: Curfew extended till July 31: Chief Minister's announcement! Published on: 16 July 2021, 10:30 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.