அரபிக்கடலில் உருவாகியுள்ள 'டவ்-தே' புயல் காரணமாகப் பலத்த காற்று வீசுவதால் பல்வேறு பகுதிகளில் வாழை மரங்கள் மற்றும் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் செய்வதறியாது விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
டவ்-தே அதி தீவிர புயல்
அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே மிக அதி தீவிர புயலாக வலுவடைந்து வடக்கு, வடக்கு-மேற்கு திசையில் நகர்ந்து மே 18 மதியம் அல்லது மாலையில் குஜராத்தில் போர்பந்தர் மற்றும் நாலியாவுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அதிதீவிர புயலின் காரணமாகத் தமிழ்நாட்டில் உள்ள மலை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வாழை மரங்கள் சேதம்
இந்நிலையில், புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசிவருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வாழை மரங்கள் மற்றும் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன
டவ்-தே புயல் : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை!!
கமுதி, சுற்றியுள்ள கோரப்பள்ளம், கூலிப்பட்டி, நீராவி, காவடிப்பட்டி, மேலராமநதி, கீழராமநதி,கரிசல்குளம், நீராவிஉட்பட பல்வேறு கிராமங்களில் பலத்த காற்று வீசியதில் 50 ஏக்கரில் அறுவடைக்குத் தயார்நிலையிலிருந்த ரூ.80 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது.
இதேபோல், கூடலூர் அருகே வீசிய பலத்த காற்று காரணமாக அறுவடைக்கு வர உள்ள வாழைத்தார்கள் முற்றிலும் சேதமடைந்தன.
நெற்பயிர்கள் சேதம்
கம்பத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த 50 ஏக்கர் நெல் பயிர்கள் மழையால் சாய்ந்து சேதமடைந்துள்ளது, அறுவடைக்குத் தயார் நிலையிலிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்ததால் செய்வதறியாது விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
Share your comments