நாடு முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன் படி ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் எரிவாயு விலை குறைய இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஸ் சிலிண்டர் விலை
நாடு முழுவதும் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான சமையல் எரிவாயுவின் விலை எகிறிக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் இந்தியாவின் அமைச்சரவை இந்த வாரம் ஒரு எரிவாயு குழு அறிக்கையை ஏற்க இருக்கிறது. அதன் படி ஏப்ரல் மாதம் முதல் உள்ளூர் எரிவாயுக்கான விலை ஒரு மில்லியன் பிரிட்டிஷ் வெப்ப அலகுகளுக்கு (mmBtu) $6.50 ஆக நிர்ணயிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, எரிசக்தி நிபுணர் கிரிட் பரிக் தலைமையிலான குழுவை இந்தியா அமைத்தது. அந்த குழு, நுகர்வோருக்கு நியாயமான விலையை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக இந்தியாவின் எரிவாயு விலை சூத்திரத்தை மறுபரிசீலனை செய்தது.
அந்த வகையில் பழைய பிளாக்குகளில் இருந்து தயாரிக்கப்படும் எரிவாயுவின் மாதாந்திர விலையானது இந்திய கச்சா கூடையின் மாதாந்திர சராசரியில் 10 சதவீதமாக நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் இதன் உச்சவரம்பு $6.5/mmBtu மற்றும் $4/mmBtu என இருக்க வேண்டும் எனவும் குழு பரிந்துரை செய்துள்ளது.
பழைய தொகுதிகளில் இருந்து எரிவாயுவின் தற்போதைய விலை $8.57 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மார்ச் வரை இருக்கும் எனவும் ஏப்ரல் மாதம் முதல் விலை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
MRP-ஐ விடவும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
மாடுகளுக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு: கிராம மக்களின் சிறப்பான செயல்!
Share your comments