தமிழகத்தில் ஜனவரி 5ம் தேதியின் தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கியது. குறிப்பாகச் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பானதால், அச்சம் அதிகரித்துள்ளது.
கொடூரக் கொரோனா (Cruel corona)
திங்கட்கிழமை வரை கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் இருந்தது. ஆனால் அதிரடி உயர்வாக, ஜனவரி 4ம் தேதிக்கான பாதிப்பு 2 ஆயிரத்தைக் கடந்த நிலையில், ஜனவரி 5ம் தேதி 4,862 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு 16577 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுத் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
4,862 பேர்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,17,611 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 4,862 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் பாதிப்பு (Increasing vulnerability
4ம் தேதி 2,731 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 5ம் தேதி 5 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 60 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் தினசரி பாதிப்பு இரண்டு மடங்காக உயர்கிறது. குறிப்பாகச் செவ்வாய்கிழமை 1,489 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், புதன் கிழமை 2,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக (District wise)
செங்கல்பட்டில் 596 பேருக்கும், கோவையில் 259 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 127 பேருக்கும், திருவள்ளூரில் 209 பேருக்கும், வேலூரில் 184 பேருக்கும், தூத்துக்குடியில் 123 பேருக்கும், கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 7 ஆயிரத்து 58 ஆக உயர்ந்துள்ளது.
9 பேர் பலி (9 people killed
கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,814 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 16577 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments