தமிழகத்தின் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,700 ஆக அதிகரித்திருப்பது, அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் அச்சமடையச் செய்துள்ளது.
கொரோனா வைரஸ் (Corona virus)
உலக நாடுகளை உலுக்கி எடுத்தக் கொரோனா இந்தியாவிலும் கோரத் தாண்டவம் ஆடியது. எனினும் அரசுகள் எடுத்த அதிரடி நடவடிக்கையால் கட்டுக்குள் வந்துள்ளதே என சற்று ஆறுதல் அடைந்திருந்தோம்.
ஆனால் அதற்குள் ஒமிக்ரான் வைரஸ் என்றப் பெயரில் உருமாறியக் கொரோனா, அப்பாவி மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த 2 நாட்களில் கொரோன பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
2,683 பேர் (2,683 people)
தமிழகத்தில் 1,03,798 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 2,683 பேர், வங்க தேசம் 17, ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் கானா நாட்டில் இருந்து வந்த தலா ஒருவரும் மேற்குவங்கம் 10, அசாம் 3, ஆந்திரா 3, மகாராஷ்டிரா, கர்நாடகா, தலா இரண்டுபேரும், டில்லி, மேகலயா, தெலங்கானா, கேரளா, பிஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து வந்த தலா ஒருவரையும் சேர்த்து மொத்தம் 2,731 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஜனவரி 4ம் தேதி 674 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,06,370 ஆக உயர்ந்துள்ளது.
9 பேர் பலி (9 people killed)
9 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம் கொரோன வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,805 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 876 ஆக இருந்த நிலையில் ஜன.4 ம் தேதி, 1,489 ஆக அதிகரித்துள்ளது.ஜனவரி 3ம் தேதி 1,728 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் 4ம் தேதி பாதிப்பு 2,731 ஆக அதிகரித்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
(லாக்-டவுன்) Lockdown
இதையடுத்து சுகாதாரத்துறை நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார். இதில், இரவு நேர ஊடங்கு, பள்ளிக் கல்லூரிகள் செயல்படுவது, கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பது, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதில் கட்டுப்பாடு, லாக்டவுன் ( Lockdown) குறித்து விவாதிக்கப்பட்டுளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க...
PM Kisan:10வது தவணை பெறவில்லையா? இந்த எண்களை அழைக்கவும்
விவசாயிகளுக்கு எச்சரிக்கை! குளிர்காலத்தில் வாழையில் இதை கவனிக்கவும்
Share your comments