'அம்மா' குடிநீர் திட்டத்தை போல, 'ஆவின்' குடிநீர் திட்டத்தை செயல்படுத்த, பால் வளத் துறை முடிவெடுத்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், பயணியருக்கு குறைந்த விலையில் குடிநீர் கிடைப்பதற்காக, 'அம்மா குடிநீர் திட்டம்' அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான தொழிற்சாலை, திருவள்ளூர் மாவட்டம், கும்முடிபூண்டியில், போக்குவரத்து துறை வாயிலாக அமைக்கப்பட்டது.
அம்மா குடிநீர் (Amma Drinking water)
கும்முடிபூண்டியில் உற்பத்தி செய்யப்பட்ட 1 லிட்டர் குடிநீர் பாட்டில், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது, அம்மா குடிநீர் திட்டத்தை போன்று, ஆவின் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த, பால் வளத் துறை முடிவெடுத்துள்ளது.
ஆவின் குடிநீர் (Aavin Drinking water)
ஆவின் நிறுவனத்திற்கு பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப்படும் 28 பண்ணைகளில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இங்கு, முதற்கட்டமாக 1 லிட்டர், அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட உள்ளன. ஆவின் பாலகங்கள், குளிர்பான கடைகளில், அவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.
குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது எல்லாம் சரிதான், ஆனால் இதனால் நிலத்தடி நீர் வளம் குறைந்து விடும் என்பதையும் சிந்தித்து அரசு முடிவுகளை மேற்கொண்டால் நன்றாக இருக்கும். நிலத்தடி நீர் வளம் குன்றாத வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவது தான் மிகவும் நல்லது.
மேலும் படிக்க
அரசு பேருந்துகளில் களைகட்டும் பார்சல் சேவை: மக்களிடையே நல்ல வரவேற்பு!
பனை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்: மானியத்துடன் நல்ல வருமானம்!
Share your comments