சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளையும் தாக்கியது. பின்னர் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உருமாறி புதிய வைரஸ்கள் பரவத் தொடங்கின. இதற்கு தனித்தனி பெயர்கள் வைக்கப்பட்டன. இந்த வைரஸ்கள் பிற நாடுகளுக்கு பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.
டெல்டா வைரஸ்
இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் B.1.617 என்ற புதிய வைரஸ் கண்டறியப்பட்டது. இதற்கு டெல்டா வைரஸ் (Delta virus) என்று பெயரிடப்பட்டது. இது தீவிரம் காட்டியதால் தான் இரண்டாவது அலையில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டதாக வல்லுநர்கள் குறிப்பிட்டனர். முதல் அலையை காட்டிலும் உயிரிழப்புகள் அதிகரிக்கவே பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்தனர். இதையடுத்து தடுப்பூசி மீதான ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது. அனைத்து இந்தியர்களுக்கும் தேவையான தடுப்பூசியை விநியோகம் செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தியாவில் அதிவேகமாக பரவிய கொரோனா இரண்டாவது அலையால் மொத்த பாதிப்புகள் 2.89 கோடியை தாண்டியுள்ளது.
புதிய வைரஸ்
உயிரிழப்புகள் 3,49,293 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாலை நிலவரப்படி 14,02,436 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் (National Virology Center) B.1.1.28.2 என்ற புதிய வைரஸை கண்டுபிடித்துள்ளது. இது பிரேசில் மற்றும் இங்கிலாந்தில் இருந்து வருகை புரிந்த பயணிகளிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு உடல் எடை குறைவு, சுவாசப் பாதையில் பாதிப்பு, நுரையீரலில் புண்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த புதிய வைரஸ் டெல்டா வைரஸை ஒத்திருப்பதாகவும், இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட மோசமான ஆல்பா வகை வைரஸை (Alpha Virus) விட அதிக ஆபத்து நிறைந்துள்ளதாகவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க
கொரோனா 3-ம் அலையை, வருமுன் தடுக்க சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்!
+2 தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது தமிழக அரசு!
Share your comments