1. செய்திகள்

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை! மேலும் 2 புதிய தடுப்பூசிகள் வருகை!

R. Balakrishnan
R. Balakrishnan
PM Modi Speech

Credit : Dinamalar

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள, நம்மிடம் உள்ள ஒரே பேராயுதம் தடுப்பூசி (Vaccine) தான். கொரோனாவைத் தடுக்க இன்னும் 2 தடுப்பூசிகள் வரும் என பிரதமர் மோடி (PM Modi), இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது தெரிவித்தார்.

பிரதமர் உரை

கொரோனா 2வது அலைக்கு (Corona 2nd Wave) எதிராக இந்தியா கடுமையாக போராடி வருகிறது. அதில், இந்தியா பல்வேறு இடர்பாடுகளை சந்தித்துள்ளது. ஏராளமானோர், தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு எனது இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். கொரோனா வைரஸ் கடந்த ஆண்டிலிருந்து இன்று வரை பெரிய பேரிடராக அமைந்துள்ளது. நவீன உலகம் கொரோனா போன்ற ஒரு பேரிடரை கண்டதில்லை.

மருத்துவமனைகள் அமைப்பதில் விரைவாக செயல்பட்டோம். புதிய சுகாதார உள்கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளோம் . ஏப்ரல், மே மாதங்களில் ஆக்சிஜன் (Oxygen) தேவை கணிக்க முடியாத அளவிற்கு ஏற்பட்டது. ரயில் விமானம் டேங்கர்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டு தேவை பூர்த்தி செய்யப்பட்டது. போர்க்கால அடிப்படையில் செயல்பட்டோம். மக்களுக்கு உதவ முப்படைகள் ஈடுபடுத்தப்பட்டன. அத்தியாவசிய மருந்துகள் உற்பத்தி வேகமாக அதிகரிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள சுகாதார கட்டமைப்பை 1.5 ஆண்டுகளில் வலுப்படுத்தி உள்ளோம்.

மனித குலத்திற்கு கொரோனா மிகப்பெரிய எதிரி. கொரோனாவிற்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது. முகக்கவசம், சமூக இடைவெளியை (Social Distance) பின்பற்றுதல் மிக அவசியம். கொரோனாவை தடுக்க தடுப்பூசி தான் ஒரே பேராயுதம். உலகில் ஒரு சில தடுப்பூசி நிறுவனங்களே உள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியால் பலரை காப்பாற்றி உள்ளோம். 2வது அலையை எதிர்த்து போராட தடுப்பூசி தான் உதவியது. ஆரம்பத்தில் நமது தடுப்பூசி இயக்கம் மெதுவாக செயல்பட்டது. 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய துயரத்தை கொரோனா ஏற்படுத்தி உள்ளது.

2 புதிய தடுப்பூசிகள்

குழந்தைகளுக்காக சில தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தனது குடிமக்களை இந்தியா எப்படி காப்பாற்ற போகிறது என்ற கேள்வி பல நாடுகளில் எழுந்துள்ளது. உலகத்துடன் இணைந்து இந்தியா செயல்படுகிறது என்பதை நமது விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இன்று 23 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. நம் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். நமது விஞ்ஞானிகள் மீது இந்தியா நம்பிக்கை வைத்து உள்ளது. இன்னும் ஒரு ஆண்டில் கொரோனா தடுக்க இன்னும் 2 தடுப்பூசி விரைவில் வரவுள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

9வது முறை

இந்தியாவில் கோவிட் பரவ துவங்கிய பின்னர் பிரதமர் மோடி இதுவரை 8 முறை நாட்டு மக்களிடம் உரையாற்றி உள்ளார். அப்போது, கொரோனா பரவல் குறித்தும், அதனை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட துறைகளுக்கு அரசின் சலுகைகள், தடுப்பூசி குறித்து பேசியிருந்தார். தற்போது 9வது முறையாக பேசியுள்ளார். நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக குறைந்து உள்ளது.

மேலும் படிக்க

+2 தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது தமிழக அரசு!

தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு! இன்று முதல் அமலுக்கு வருகிறது!

English Summary: Prime Minister Modi's speech to the people of the country! Visit 2 more new vaccines!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.