XXB.1.5 ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் நமது நாட்டிற்குள் நுழைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் குஜராத் மாநிலத்தில் முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட விஷயம் தீயாய் பரவி கொண்டிருக்கிறது. வெளிநாட்டு தொடர்பின் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸ் (Corona Virus)
அடுத்த 40 நாட்கள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். நான்காம் அலை உருவாக வாய்ப்பிருப்பதால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது.
அண்டை மாநிலமான மகாராஷ்டிராவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இம்மாநிலத்தில் XBB வைரஸ் பாதிப்பு 275 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் XBB.1.5 பாதிப்பு இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை பொறுத்தவரை வெளிநாடுகளில் இருந்து வருவோர் விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
நோய் எதிர்ப்புச் சக்தி (Immunity)
அனைவரிடமும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். 30 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் வீரியத்துடன் இருக்கும். அதற்காக நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க
பொங்கல் பரிசில் ஏதேனும் பிரச்சனையா? புகார் தர இலவச எண்கள் வெளியீடு!
பொதுமக்கள் கவனத்திற்கு : ஜனவரி மாத வங்கி விடுமுறை நாட்கள் இதோ!
Share your comments