கொரோனா பரவல் தொடர்பாக மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைக்கு பிறகே பள்ளி திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல் அலையைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் 2வது கோர தாண்டவமாடி வருகிறது. இதன் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
குறைந்து வரும் கொரோனா தொற்று
எனினும், 2வது அலையின் தாக்கம் சற்று குறைந்து வரும் காரணத்தினால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன் படி, பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற கேள்வி மாணவர்கள் ,பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், திருச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது, கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
விரைவில் +2 மதிப்பெண் பட்டியல்
பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழிக்காட்டு நெறிமுறைகள் அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி, பிளஸ் 2 முடித்த மாணவர்களின் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு மதிப்பெண்கள் பள்ளிக் கல்வித் துறையிடம் உள்ளது. எனவே, மதிப்பெண்கள் வழங்கும் பணி விரைவில் முடிக்கப்பட்டு வெளியிடப்படும்.
3வது அலை வருமா?
மேலும்,கொரோனா தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. ஆனால், கொரோனா 3 வது அலை வரும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். எனவே, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிக்காட்டல்கள், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துகள் மற்றும் முதல்-அமைச்சரின் ஆலோசனையைப் பெற்ற பிறகே, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
மேலும் படிக்க...
சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு டெல்டா பிளஸ் கொரோனா எச்சரிக்கை!
ஜூலை 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! என்னென்ன தளர்வுகள்!
Share your comments