1.தமிழக பால் விவசாயிகளுக்கு 2 லட்சம் ஜெர்சி பசுக்கள் வழங்க முடிவு!
தமிழக பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஆவின் பால் சுரக்க 2 லட்சம் ஜெர்சி பசுக்கள் வழங்கப்பட உள்ளது. ஆவின் பால் கொள்முதல் 37.38 லட்சமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஒரு நாளைக்கு 26 முதல் 27 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. இதனை அடுத்து இந்த அறிவிப்பு வெளியானதாகக் கூறப்படுகிறது.
ஜனவரி முதல் அதிக விலைக்கு தனியார் பால் பண்ணைகளுக்கு பாலை விற்பனை செய்து வரும் பால் பண்ணையாளர்களின் ஒரு பிரிவினரால் பால் விவசாயிகள் ஏமாற்றப்பட்டதை அடுத்து, பால் விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பிற மாநிலங்களில் இருந்து இரண்டு லட்சம் கலப்பின ஜெர்சி கறவை மாடுகளை வாங்க ஆவின் முடிவு செய்துள்ளது.
2.வாழைத்தார் விலை வீழ்ச்சி
கரூர் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வாழையை அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் வாழைத்தார்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் அருகாமையில் செயல்பட்டு வரும் தினசரி மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.350-க்கும், ரஸ்தாலி ரூ.320-க்கும், பச்சைநாடன் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி ரூ.350-க்கும், மொந்தன் ரூ.500-க்கும் விற்பனையானது.
நேற்று பூவன் வாழைத்தார் ரூ.300-க்கும், ரஸ்தாலி ரூ.200-க்கும், பச்சைநாடன் ரூ.250-க்கும், கற்பூரவள்ளி ரூ.200-க்கும், மொந்தன் ரூ.300-க்கும் விற்பனையானது. வரத்து அதிகரிப்பால் வாழைத்தார்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
3.நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும், வருவாயையும் மேம்படுத்த மாநில அரசு நடவடிக்கை
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும், வருவாயையும் மேம்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கைத்தறி மற்றும் நெசவாளர் துறை அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார். அதோடு, நெசவாளர்களுக்கு உறுதியான ஊதியம் மற்றும் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகைகளை வழங்க தமிழக அரசு செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
4.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் ஒருங்கிணைந்த பயணிகள் குறை அல்லது புகார் அளிக்கும் உதவி எண் அறிமுகம்
- அரசு பேருந்துகள் நிறுத்தும் உணவகங்களில்
- கழிவறைக்கு பணம் வாங்கினால்
- mrp யை விட அதிக விலைக்கு விற்றால்
- சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொடுக்கப்படவில்லையென்றால்
- கணினி ரசிது கொடுக்கப்படவில்லை என்றால் புகார் அளிக்க உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
1800 599 1500
புகார் அளிக்க மேற்காணும் எண்ணை தொடர்புகொள்ளவும்.
5.இமயம் தோட்ட தங்கம் விலை ஒரே நாளில் ரூ.728 விலையேற்றம்
இன்று ஒரேநாளில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.728 உயர்ந்து ரூ.45,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.91 உயர்ந்து ரூ.5,706-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
6.தமிழகத்தை குளிர்விக்கும் கோடை மழை
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
மேலும் படிக்க
Aavin: தமிழக பால் விவசாயிகளுக்கு 2 லட்சம் ஜெர்சி பசுக்கள் வழங்க முடிவு!
மனோபாலாவின் பாராட்டு இன்னும் நெஞ்சில் நிழலாடுகிறது- முதல்வர் இரங்கல்
Share your comments