இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது பாதிப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது. இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,81,386 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறையும் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த தொற்று தாக்கி வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைய தொடங்கியுள்ளது ஆறுதல் அளிக்கிறது
இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,81,386 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, இருப்பினும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4,106 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 49 லட்சத்து 65 ஆயிரத்து 463 ஆக உயர்வடைந்து உள்ளது. மொத்த பலி எண்ணிக்கை மொத்த 2,74,390 ஆக உயர்ந்து உள்ளது.
கொரோனா பாதிப்பு விவரம்
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 78 ஆயிரத்து 741 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 11 லட்சத்து 74 ஆயிரத்து 076 ஆக உயர்வடைந்து உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 35,16,997 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்
நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 18 கோடியே 29 லட்சத்து 26 ஆயிரத்து 460 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.
மொத்த பரிசோதனைகள்
இந்தியாவில் இதுவரை 31 கோடியே 64 லட்சத்து 23 ஆயிரத்து 658 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 15,73,515 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிக்க இ-பதிவு கட்டாயம்!
கிராமங்களில் பரவும் கொரோனா! சுய ஊரடங்கு அவசியம்!
லைசன்ஸ் வாங்க இனி அலைய வேண்டாம்! வீட்டிலிருந்தே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
Share your comments