நேற்று மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep depression) இன்று காலை 7 மணி அளவில் ஆந்திர கடற்கரை காக்கிநாடா (Kakinada) அருகே கரையைகடந்து, தற்போது கடலோர ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலைகொண்டுள்ளது.
நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு
இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை
நேற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி- மின்னலுடன் மழை பெய்த்து. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை எழும்பூர், வேப்பேரி, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, மெரினா காமராஜர் சாலை, சிந்தாதிரிப்பேட்டை, அண்ணாநகர், திருமங்கலம், சென்டிரல், சாந்தோம், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. அதேபோல தாம்பரம், குரோம்பேட்டை, ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, மடிப்பாக்கம், பரங்கிமலை, மீனம்பாக்கம், செங்குன்றம், சோழவரம், விளாங்காடுபாக்கம், மாதவரம், கொடுங்கையூர், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.
இதேபோல், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மழைபெய்த விவரம் (சென்டிமீட்டரில்)
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை (கோவை) 11 ,சின்னக்கல்லார் (கோவை) 9, சோலையார் (கோவை), நடுவட்டம் (நீலகிரி) தலா 8 ,அவலாஞ்சி (நீலகிரி), சின்கோனா (கோவை) தலா 7, சோளிங்கர் (ராணிப்பேட்டை), சுராலகோடு (கன்னியாகுமாரி), பெரியாறு (தேனி), பாபநாசம் (திருநெல்வேலி ) 5 சென்டிமீட்டர் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
-
அக்டோபர் 13 மற்றும் 14-ம் தேதிகளில் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
இதேபோல், கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடல் உயர்அலை முன்னறிவிப்பு
தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 13.10.2020 இரவு 11:30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 2.8 முதல் 3.8 மீட்டர்வரை எழும்பக்கூடும்.
மேலும் படிக்க...
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
PM Kisan திட்டத்தின் 7வது தவணை விரைவில்! விவசாயிகளே இன்றே விண்ணப்பித்திடுங்கள்!
விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் 15,26,534 மெட்ரிக் டன்கள் நெல் கொள்முதல்!
காற்று மாசுபாட்டை தடுக்க டிராக்டர்களுக்கும் நெறிமுறைகள் வகுப்பு!
Share your comments