தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் ஆட்டுச்சந்தைகளில் ஆடுகள் விற்பனைக் களை கட்டியுள்ளது. அதிகபட்சம் ஆடுகள் 10 ஆயிரம் ரூபாய்க்கு விலைபோகின்றன.
பாரம்பரியம் (Tradition)
வரும் 14ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. நரகாசூரன் அழிந்த தினமான தீபாவளி அன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை உடுத்தி, ஆட்டுக்கறிக்குழம்புடன் விருந்து சாப்பிடுவது வழக்கம்.
இதனைக் கருத்திகொண்டு, தேவை அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் வரத்து குறைந்துள்ள காரணத்தால், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரில் திங்கள்கிழமை கூடிய வாரச்சந்தையில், ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்ட பல்வேறு இன ஆடுகள் 500 முதல் 800 வரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாக முடங்கியிருந்த சந்தை கடந்த சில வாரங்களாக நடத்தப்படுகிறது.
அதன்படி பேரூர் ஆட்டுச்சந்தை மீண்டும் திங்கள்கிழமை தோறும் கூடியது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகளைக் கொள்முதல் செய்ய பல்வேறு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் ஆட்டுச்சந்தைக்கு வந்திருந்தனர்.
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வாழப்பாடியையொட்டி நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் தர்மபுரி மாவட்ட எல்லையில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் நுகர்வோர்களும், பேளூர் வாரச்சந்தையில் வளர்ப்புக்காகவும் இறைச்சிக்காவும் ஆடுகளை விற்பனையும், கொள்முதலும் செய்து சென்றனர்.
ஆடுகளுக்குத் தட்டுப்பாடு (Shortage of sheep)
ஆனால், குறைவான ஆடுகளே விற்பனைக்கு வந்திருந்தன. இதனால் ஆடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் வரை ரூ.8 ஆயிரத்திற்கு விலைபோன ஆடுகள் தற்போது ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் படிக்க...
குட்பை சொல்லும் குப்பைகள்- உரமாகும் அதிசயம்!
Share your comments