1. செய்திகள்

தாமதமாகும் நெல் கொள்முதல் நிலையங்கள் : தனியாருக்கு விற்கப்படும் நெல் மூட்டைகள்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit : The subeditor

பொங்கலுக்கு பின்னர் நெல் வரத்து அதிகரிக்கும் என்பதால், கூடுதலாக கொள்முதல் நிலையங்கள் அமைக்கும் பணியில் நுகர்பொருள் வாணிப கழகம் ஈடுபட்டுள்ளது. கரூர் பகுதிகளில்  நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், மிக குறைந்த விலையில், தனியாரிடம் நெல் விற்பனை செய்ய வேண்டியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2020 அக்டோபர் முதல் துவங்கிய நெல் கொள்முதல் பணிகள் செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. அந்த சீசனில் இதுவரை நுகர்பொருள் வாணிப கழகம் சுமார் 1.05 லட்சம் விவசாயிகளிடம் இருந்து, 5.82 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளது. அதற்காக, அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக ரூ. 1,132 கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவு

தமிழகத்தில் 2019 -- 20ம் ஆண்டு சீசனில் மட்டும் 2,135 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 32.41 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதுவே அதிகபட்ச சாதனை அளவாகும். நடப்பு சீசனில் நெல் வரத்து அதிகம் உள்ள பகுதிகளில் தேவைக்கு ஏற்ப கொள்முதல் நிலையங்களை திறக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உணவுத்துறை வட்டராத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி பாசன வாயிலாக சுமார் 12,800 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. பொங்கள் பண்டிகையொட்டி கடந்த சில நாட்களாக நெல் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், இதுவரை நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

குறைவான விலையில் கொள்முதல்

இது தொடர்பாக விவசாய சங்க நிர்வாகிகள் கூறுகையில்,  அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை, ஊக்கத்தொகை சேர்த்து நெல் கிரேடு, 'ஏ' ரகத்துக்கு குவின்டாலுக்கு ரூ.1,958ம்,  பொது ரக நெல் ரூ.1,918 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. தற்போது குளித்தலையில் நெல் அறுவடை தொடங்கிய நிலையில், நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. அதனால், தனியாரிடம் நெல் விற்கப்படுகிறது. 800 - 850 ரூபாய் என விலையில், தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.


விரைவில் கொள்முதல் நிலையம் திறப்பு

கரூர் மண்டல மேலாளர் புவனேஸ்வரி கூறுகையில், ''கொள்முதல் நிலையம் தொடங்க இடம் தேர்வு செய்யப்படுகிறது. கலெக்டர் மலர்விழியின் அனுமதி பெற்று, ஒரு வாரத்திற்குள் இரண்டு இடங்களில் கொள்முதல் நிலையம் தொடக்கப்படும். பின், தேவைக்கு ஏற்ப விரிவுபடுத்தப்படும்,'' என்றார்.

மேலும் படிக்க...

ஆன்லைனில் டிஜிட்டல் அக்கௌன்ட்! SBI வங்கியின் புதிய திட்டம்!

பிஸினஸ் ஐடியா 2021 : அமுல் உடன் தொழில் தொடங்கலாம் வாங்க! குறைவான முதலீட்டில் நிறைவான வருமானம்!!

வேலை இழப்பை சமாளிக்க வந்துள்ளது ஒரு காப்பீடு!

English Summary: Delayed in setting up Paddy Procurement Stations: Farmers sell paddy to private for less cost Published on: 07 January 2021, 08:04 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.