தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகை, வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி, ஜனவரி 17-ஆம் தேதி திங்கள்கிழமை வரை கொண்டாடப்படும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதனால் 4 நாட்கள் விடுமுறையாக இருக்கும். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. எனவே சென்னை உள்ளிட்ட நகரங்களில் படிப்பிற்காக, தொழிலுக்காக வசித்து வருவோர், சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினரோடு பண்டிகையை கொண்டாட விரும்புவர். இவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் அதற்கான முழு விவரங்களையும் அறிந்துக்கொள்ளுங்கள். இதற்கான முன்பதிவுகள் கடந்த வாரமே தொடங்கியுள்ளது.
இதையடுத்து, அரசு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையங்கள், இணையத்தளம் முகவரியான www.tnstc.in என்ற இணையதளத்திலும், தனியார் ஆப்களை பயன்படுத்தி பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் பேருந்துகளின் எண்ணிக்கை, பேருந்து நிலையங்கள் குறித்த தகவல்கள் பற்றிய முழு விவரமும் பின்னர் அறிவிக்கப்படும் என்று நேற்று(திங்கட்கிழமை) போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்திருந்தார். இன்று அவர் செய்தியாளர்களிடம், பொங்கல் சிறப்பு பேருந்து மட்டும் நிலையங்கள் குறித்த தகவலை வெளியிட்டார். அதில்,
ஜனவரி 11 முதல் ஜனவரி13 வரை
மொத்த சிறப்புப் பேருந்துகள்-16,768
சென்னையில் இருந்து மட்டும்-10,300 பேருந்துகள் செயல்படும் என அறிவித்துள்ளார். மேலும், கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் – பேருந்து நிலையங்களில் இருந்து,
ஜனவரி 16 முதல் ஜனவரி 18 வரை
மொத்தம் 16,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேட்டில் இருந்து பேருந்து நிலையங்களுக்கு 24*7 இணைப்பு பேருந்துகள் செயல்படும் எனவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கூடுதல் கட்டணம் பற்றி புகார் தெரிவிக்க 18004256151 என்ற எண்ணிற்கு தொடர்புக் கொள்ள அறிவுறுத்தினார். மேலும் பேருந்து நிலையங்கள், முன்பதிவு நிலையங்கள் எண்ணிக்கை மற்றும் பேருந்து எண்ணிக்கை குறித்த தகவலை கீழே காணுங்கள்.
சிறப்பு பேருந்து நிலையங்கள்
1. கோயம்பேடு 2. தாம்பரம் சானடோரியம் 3.மாதவரம் 4.தாம்பரம் 5.பூவிருந்தவல்லி 6.கே.கே.நகர்
பூவிருந்தவல்லி பேருந்து நிலையம்
வேலூர், காஞ்சிபுரம், ஆரணி, செய்யாறு, கிருஷ்ணகிரி, ஆற்காடு, ஒசூர், திருத்தணி, திருப்பத்தூர், தருமபுரி.
கோயம்பேடு பேருந்து நிலையம்
நாகை, தூத்துக்குடி, திருவனந்தபுரம், திருச்சி , விழுப்புரம், சேலம், மதுரை, திருப்பூர், கோவை, நெல்லை, ஈரோடு, பெங்களூரு, குமரி, ராமநாதபுரம்.
மாதவரம் பேருந்து நிலையம்
ஆந்திரா செல்லும் பேருந்துகள் – (வழி கும்மிடிப்பூண்டி)
கே.கே.நகர் பேருந்து நிலையம்
புதுச்சேரி கடலூர் சிதம்பரம் – (ECR வழியாக)
தாம்பரம்(சானடோரியம்)-கும்பகோணம்-தஞ்சை(திண்டிவனம், விக்கிரவாண்டி வழி)
தாம்பரம் ரயில்நிலையம்-திருவண்ணமாலை – பன்ருட்டி – நெய்வேலி (வழி திண்டிவனம்)
புதுச்சேரி கடலூர் சிதம்பரம் (வழி திண்டிவனம்)
முன்பதிவு மையங்கள்
கோயம்பேடு - 10
தாம்பரம் சானடோரியம் – 01
நேற்று(திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில், 9 வது மாடியில் உள்ள தொழில்துறை கருத்தரங்க கூட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் 2022ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து துறையின் சார்பில் செயல்படுத்தப்பட உள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டார். மேலும் அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர். இதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை, பேருந்து நிலையங்கள் போன்ற பல்வேறு தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் தங்கள் வீடுகளுக்கு சென்று குடும்பத்தினருடன் கொண்டாட, சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 3 நாட்களில் 10,300 பேருந்துகள், இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் படிக்க:
Share your comments