பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு 6வது தவணைக்கான ரூ.2000 வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 30 நாட்களில் 38 லட்சம் விவசாயிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. பதிவு செய்த விவசாயிகளா நீங்கள்...? உங்களுக்கு பணம் வரவில்லையா..? உடனடியாக சரிபாருங்கள்! உங்களுக்கான வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
PM-Kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாயப் பணத்தை 3 தவனைகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் 6வது தவணை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிதி கொரோனா கால நெருக்கடியை சமாளிக்கும் விதமாகவும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் மத்திய அரசு வழங்கி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் சுமார் 38 லட்சம் விவசாயிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்குகளில் ரூ.2000 வீதம் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது. நவம்பர் மாதத்திற்குள் மேலும் 1.5 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த 9ம் தேதி நிகழ்ச்சியொன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 8.5 கோடி விவசாயிகளுக்கு பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் ரூ.2000 பணம் செலுத்துவதற்காக ரூ.17000 கோடி ஒதுக்கீடு செய்தார். நவம்பர் மாத இறுதி வரை கணக்கெடுக்கையில் சுமார் 10 கோடிக்கும் அதிகமான விவாசாயிகள் பி.எம் கிசான் திட்டத்தில் இணைந்துள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்படுவதன் மூலம் அவர்களின் வருமானம் உயரும் என மத்திய அரசு நினைத்து வருகிறது.
மத்திய அரசு செலுத்தி வரும் 6வது தவணை பணம் உங்கள் வங்கிக்கணக்கில் வந்துவிட்டதா? இல்லை என்றால் கீழ்காணும் முறைகளை பார்த்து சரிசெய்து கொள்ளுங்கள்.
PM-Kisan நிலையை சரிபார்த்து மற்றும் பதிவுகளை சரிசெய்வது எவ்வாறு ?
-
தங்கள் வங்கிக் கணக்கில் பணம் எதுவும் பெறாதவர்கள் உடனடியாக தங்கள் பதிவுகளை சரிபார்க்க வேண்டும். ஆதார் அட்டை எண் அல்லது வங்கிக் கணக்கு எண்ணில் ஏதேனும் தவறு இருந்தால், அதைப் பெறுவதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாதவாறு அதை சரிசெய்யவும்.
-
பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைக - https://pmkisan.gov.in/
-
இதற்குப் பிறகு, 'Farmers corner' என்பதை கிளிக் செய்க.
-
உங்கள் ஆதார் எண் சரியாக பதிவேற்றப்படவில்லை அல்லது சில காரணங்களால் ஆதார் எண் தவறாக உள்ளிடப்பட்டிருந்தால், இது தொடர்பான செய்தி உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் செய்ய வேண்டிய தரவை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
ஆதார் கார்டு விவரங்களை சரிசெய்ய நேரடி இணைப்பு ; https://pmkisan.gov.in/UpdateAadharNoByFarmer.aspx
பிரதமர் கிசான் திட்டத்தை யார் பெற முடியும், யாரால் முடியாது?
-
அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் அல்லது தற்போதைய அல்லது முன்னாள் அமைச்சர்கள், மேயர்கள் அல்லது மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி, மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது.
-
மத்திய அல்லது மாநில அரசில் உள்ள அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் ரூ.10000 ஓய்வூதியம் பெருபவர்களும் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது.
-
தொழில் வல்லுநர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சி.ஏ.க்கள், வழக்கறிஞர்கள், கட்டடக் கலைஞர்கள் விவசாயம் செய்தாலும் பலனைப் பெற முடியாது.
-
கடந்த நிதியாண்டில் வருமான வரி செலுத்திய விவசாயிகளும் இந்த திட்டத்தில் இணைய முடியாது.
-
மத்திய மற்றும் மாநில அரசு மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் / வகுப்பு IV / குரூப் டி ஊழியர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் இணைந்து பலன் பெறலாம்.
மேலும் படிக்க...
பண்டிகைகள் வருது... சந்தைகளை திறங்க...! - கால்நடை வியாபாரிகள் கோரிக்கை!
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தமிழகத்தில் தொடங்கி வைத்தார் - எடப்பாடி பழனிசாமி!
எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க சர்க்கரை ஆலைகளுக்கு கடன் சலுகை! - முழு விபரம் உள்ளே!
Share your comments