1. செய்திகள்

‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தமிழகத்தில் தொடங்கி வைத்தார் - எடப்பாடி பழனிசாமி!

Daisy Rose Mary
Daisy Rose Mary
CM

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் ''ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கிவைத்து 3 மின்னனு குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு (One Nation One Ration)

நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் கணினிமயமக்கப்பட்டு ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்க முடியும் இதற்கு ஏதுவாக ''ஓரே நாடு ஒரே ரேஷன் கார்டு'' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தொடக்கம்

இதுகுறித்த தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக அரசின் பொது விநியோகத் திட்டம் 330 கோடி ரூபாய் செலவில் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக புழக்கத்திலிருந்த குடும்ப அட்டைகளுக்கு பதிலாக ஆதார் எண் விவரங்களின் அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டம் செல்படுத்தப்பட்டு அதன் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை, தங்களின் விருப்பத்திற்கேற்ப தமிழ்நாடு முழுவதும் எந்த ஒரு நியாயவிலைக் கடையிலும் பெறத்தக்க வகையில் குடும்ப அட்டைகளின் மின்னணு முறை மாநில அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் ஒருங்கிணைந்த மேலாண்மைக்கான மத்திய அரசின் திட்டத்தின் கீழ், குடும்ப அட்டைதாரர்கள் சொந்த மாநிலத்திலிருந்து இடம்பெயரும்போது, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி உரிம அளவிலான உணவு தானியங்களை தேசிய அளவில் எங்கு வேண்டுமானாலும் பெறத்தக்க வகையில் “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” திட்டத்தினை தமிழ்நாட்டில் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

முதற்கட்டமாக 32 மாவட்டங்களில் தொடக்கம் 

இத்திட்டம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் 1.10.2020 முதல் செயல்படுத்தப்படும். மேலும், தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், இராமநாதபுரம், மதுரை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் 16.10.2020 முதல் செயல்படுத்தப்படும்.

அத்தியாவசிய பொருட்களை பெறுதல்(How to get Ration)

இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு புலம்பெயரும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி தங்களுக்குண்டான உணவு பொருட்களை உடற்கூறு முறையிலான தகவல் உறுதிப்படுத்துதல் மூலம் இடம்பெயரும் மாநிலத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் தொழில்நுட்பகாரணங்களினால் உடற்கூறு முறையிலான தகவல் உறுதிப்படுத்துதலை மேற்கொள்ள இயலாத நிலையில், தற்போதுள்ள மின்னணு குடும்ப அட்டை மற்றும் ஆதார் தொடர்புடைய கைப்பேசிக்கு வரும் ஒருமுறை கடவுச் சொல் , ஆதார் கார்டு மற்றும் தற்போதுள்ள நடைமுறையான குடும்ப அட்டை ஸ்கேனிங் முறையை பின்பற்றியும் அத்தியாவசியப் பொருள்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், வயது முதிர்ந்தோர் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேரில்வர இயலாத பயனாளிகள் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, உணவுத் துறை அமைச்சர் இரா. காமராஜ், தலைமைச் செயலாளர் க. சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க...

வாழையின் விலை வழக்கத்தைப் போல நிலையாக இருக்கும்- TNAUவின் கணிப்பு!

மிளகாய் வற்றலுக்கு ரூ.9000/- வரை கிடைக்கும்- TNAUவின் விலை முன்னறிவிப்பு!

English Summary: Tamil Nadu Chief Minister Edappadi K. Palaniswami launches one nation, one ration card scheme

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.