கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Dieel) விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. மாநில வரி மற்றும் போக்குவரத்து செலவு ஆகியவற்றால், மாநிலத்துக்கு மாநிலம் நகரத்துக்கு நகரம் எரிபொருள் விலை மாறுபடும்.
டீசல் விலை உயர்வு
கடந்த சில நாட்களில் பெட்ரோல் விலை, பல மாநிலங்களில் 100 ரூபாயை எட்டியது. இந்நிலையில் நேற்று, மத்திய பிரதேச மாநிலத்தின் பல இடங்களில், டீசல் விலை லிட்டர் 100 ரூபாயை தாண்டியது. இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் மற்றும் ஹனுமன்காட் மற்றும் ஒடிசாவின் சில நகரங்களிலும் டீசல் விலை லிட்டர் 100 ரூபாயை தாண்டியது.
மக்கள் அதிர்ச்சி
பெட்ரோல் விலை ஏற்கனவே 100 ரூபாயை தாண்டி விட்டது நிலையில், மக்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தற்போது டீசல் விலையும் 3 மாநிலங்களில் 100 ரூபாயை தாண்டி விட்டது. இனி மற்ற மாநிலங்களிலும் டீசல் விலை உயரும் என்பதில் ஐயமில்லை.
மேலும் படிக்க
அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி: உறுதி செய்யும்படி அரசுக்கு, ஐகோர்ட் அறிவுரை!
தமிழகத்தில் பொதுவான தளர்வுகள் இன்று முதல் அமல்: 11 மாவட்டங்களில் கட்டுப்பாடு நீங்கியது!
Share your comments