1. செய்திகள்

டிஜிட்டல் மயமாகும் மின் துறை: ஸ்மார்ட் மீட்டர் திட்டம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Smart meter for EB

மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட மின் விநியோக திட்டத்தின் கீழ், துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் மின் வழித்தடங்கள் முதல் வீடுகள் வரை, 'ஸ்மார்ட்' மீட்டர் (Smart Meter) பொருத்துவதன் வாயிலாக, மின் வாரியம் 'டிஜிட்டல்' மயமாக உள்ளது. மத்திய அரசு, நாடு முழுதும் தடையில்லாமல் சீராக மின் விநியோகம் செய்யவும், 12 சதவீதம் என்றளவில் உள்ள மின் இழப்பை பூஜ்யமாக குறைக்கவும் புதுப்பிக்கப்பட்ட மின் விநியோக திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

நிதி ஒதுக்கீடு (Allocation of fund)

இத்திட்டத்திற்காக, 3.03 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, மாநில மின் வாரியங்களுக்கு கடனாக வழங்கப்பட உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் திட்ட பணிகளை முடித்து விட்டால் கடனில் 60 சதவீதம் மானியமாகி (Subsidy) விடும்; அந்த தொகையை திரும்ப செலுத்த தேவையில்லை. தமிழக மின் வாரியம், இத்திட்டத்தின் கீழ் அனைத்து துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் மின் வழித்தடங்களில் மீட்டர் பொருத்த உள்ளது.

ஸ்மார்ட் மீட்டர்கள் (Smart Meters)

டிரான்ஸ்பார்மர்களிலும் மீட்டர் பொருத்தப்பட உள்ளது. இதனால் மின் இழப்பு, மின்னழுத்த பிரச்னை உள்ள இடங்கள் துல்லியமாக கண்டறியப்பட்டு, அங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க கூடுதல் டிரான்ஸ்பார்மர்கள், மின் விநியோக பெட்டிகள் நிறுவப்படும். மேலும், வீடுகளிலும் 'ஸ்மார்ட் மீட்டர்'கள் பொருத்தப்பட உள்ளன. இதனால் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, ஊழியர்கள் நேரில் செல்ல தேவையில்லை.

நுகர்வோர் பாதிப்புமின் வழித்தடம் முதல் வீடு வரை பொருத்தப்படும் அனைத்து மீட்டர்களும் தொலைத்தொடர்பு வசதியுடன், மின் வாரிய 'சர்வர்' உடன் இணைக்கப்படும். இதனால், வீடுகளில் மின் பயன்பாட்டை தினசரி, வாரம், மாதம் என கணக்கெடுக்க முடியும். மின் வழித்தடங்களில் ஏற்படும் பழுதுகளையும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தே, என்ன பிரச்னை என்பதை துல்லியமாக கண்டறிந்து, விரைந்து சரிசெய்ய ஊழியர்களுக்கு உத்தரவிட முடியும்.

மின் கம்பம் வாயிலாக செல்லும் மின் வழித்தடங்கள் அதிகம் துாரம் செல்கின்றன. வழித்தடங்களில் கம்பி அறுந்து விழுந்தால் சரிசெய்ய, மின்சாரத்தை முழுதும் நிறுத்த வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் மின் தடையால் நுகர்வோர்கள் (Consumers) பாதிக்கின்றனர்.

புதுப்பிக்கப்பட்ட திட்டம்

இதை தவிர்க்க, புதுப்பிக்கப்பட்ட மின் திட்டத்தின் கீழ், அதிக துாரம் செல்லும் மின் வழித்தடங்களில் ஒவ்வொரு 2 கி.மீ., துாரத்திற்கும் தனித்தனி 'ஸ்விட்ச் யார்டு' கட்டமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இதனால் மின் வழித்தடத்தில் பழுது ஏற்படும் போது, அந்த வழித்தடம் முழுதும் மின் விநியோகம் நிறுத்துவதற்கு பதில், எந்த இடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ, அதற்கு உட்பட்ட 2 கி.மீ., துாரம் மட்டும் மின் விநியோகம் நிறுத்தப்ப்படும்.

இழப்பு 2 ரூபாய் (2rs Loss)

இது குறித்து, மின் வாரிய தலைமை பொறியாளர் ஒருவர் கூறியதாவது: தற்போது, சில மின் வழித்தடம், டிரான்ஸ்பார்களில் தான் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் அனைத்து மின் வழித்தடங்கள், டிரான்ஸ்பார்மர்களிலும் மீட்டர் பொருத்தப்படும்.

மின்சாரத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும்போது, மின் இழப்பு ஏற்படுவது வழக்கம். தற்போது மின் உற்பத்தி, கொள்முதல், விநியோகம் போன்ற செலவுகளை உள்ளடக்கிய, ஒரு 'யூனிட்' மின்சார விற்பனை 9.71 ரூபாயாக உள்ளது. ஆனால் வரவு 7.71 ரூபாயாக இருப்பதால், இரண்டு ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நஷ்டத்தை புதுப்பிக்கப்பட்ட மின் விநியோக திட்டத்தின் கீழ் பூஜ்யமாக குறைக்க முடியும்.

மேலும் படிக்க

மின்கட்டணம் செலுத்த QR Code: புதிய வசதி அறிமுகம்!

வந்தாச்சு சலுகை விலையில் பால்: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

English Summary: Digital power sector: Smart meter project! Published on: 02 January 2022, 07:43 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.