மகளிர் குழுக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த காசோலை (Cheque) பணமின்றித் திரும்பியதால், பெண்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
நலத்திட்ட உதவி (Welfare assistance)
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், கடந்த வாரம் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சுழல் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும், 400க்கும் மேற்பட்ட மகளிர் குழுவினருக்கு, 105 கோடி ரூபாய் மதிப்பில் சுழல் நிதிக்கான காசோலைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
காசோலை திரும்பியது (The check is returned)
சுய உதவிக்குழுவினருக்கு சுழல் நிதிக்கான காசோலைகளை, முதல்வரே நேரடியாக வழங்கினாலும், இதற்கு இன்னும் நிதி ஒதுக்காததால், மகளிர் திட்ட அலுவலர்கள், அந்த காசோலைகளை திரும்ப பெற்றுள்ளனர்.
திருவள்ளூர் நகராட்சி, பெரியகுப்பம், கார்த்திகை மகளிர் சுய உதவிக்குழுவினர், 5 லட்சம் ரூபாய்க்கு காசோலை பெற்றிருந்தனர்.
அக்குழுவினர், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு சென்று, முதலமைச்சர் வழங்கிய காசோலையை, தங்களது கணக்கில் வரவு வைக்கக் கோரினர்.
ஆனால், முதல்வர் வருகையால் சம்பிரதாயத்திற்காக 'செக்' வழங்கினோம். இன்னும் நிதி ஒதுக்கவில்லை. எனவே, மகளிர் திட்ட அதிகாரிகளிடம் காசோலையைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மகளிர் திட்ட அலுவலர்கள் கூறியதாவது:-
முதலமைச்சர் திடீர் வருகையால், தகுதி வாய்ந்த மகளிர் குழுவினரை உடனடியாக தேர்வு செய்ய முடியவில்லை. இதனால், அந்தந்த வங்கிகளில், தொடர்ந்து வரவு - செலவு நடத்தி வரும், குறிப்பிட்ட குழுவினரை தேர்வு செய்து, கடன் தொகை நிர்ணயித்து, 'செக்' வழங்கினோம்.வங்கி நடைமுறைப்படி, உரிய ஆவணம் பெற்றதும், விரைவில் மகளிர் குழுவினருக்கு ஒதுக்கிய சுழல் நிதி வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வங்கிக்கணக்கில் வரவு
திருவள்ளூர் ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட மகளிர் குழுவினருக்கு ஒதுக்கப்பட்ட பணம், அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது, வேறு எதுவும் பிரச்னையில்லை,'' என்றார்.
மேலும் படிக்க...
முதன் முதலாக சூரியனை தொட்டது அமெரிக்க விண்கலம்!
கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி தட்டுப்பாடு: இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!
Share your comments