பயிர்களை பூச்சிகள் தாக்கி, நோய்களை உண்டாக்கி விளைச்சலை பாதிக்கிறது. அந்த வகையில் தற்போது, உருளை கிழங்கு (Potatoes) செடிகளை நோய் தாக்கி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நோய்த் தாக்குதல்:
நீலகிரி மாவட்டத்தில் (Nilgiris district) ஆண்டுக்கு, 3,700 ஏக்கர் பரப்பளவில், உருளை கிழங்கு பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் உருளை கிழங்குக்கு, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில சந்தையிலும் அதிக கிராக்கி உள்ளது. மேட்டுப்பாளையம் சந்தையில், கடந்த மாதம் கிலோவுக்கு, 65 ரூபாய் வரை விலை கிடைத்தது. தற்போது கிலோவுக்கு, 45 முதல் 50 ரூபாய் வரை விலை கிடைத்து வருகிறது. இந்நிலையில், நடுவட்டம் டி.ஆர்., பஜார் பகுதியில் பயிரிட்டுள்ள உருளை கிழங்கு செடிகளை நோய் தாக்கி உள்ளதால், விவசாயிகளுக்கு நஷ்டம் (Loss) ஏற்படும் அபாயம் உள்ளது.
தோட்டக்கலை துறை ஆய்வு
தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிவசுப்ரமணியம் (Sivasubramaniam) கூறுகையில், ''நவம்பர் மாதத்தில் பனிப்பொழிவு (Snowfall) துவங்கி விடும் என்பதால், அதற்கு முன் உருளை கிழங்கு அறுவடை பணிகள் முடிந்து விடும். இப்பகுதியில், காலநிலை (Climate) மாறி உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். ''தற்போது, பனிப் பொழிவு ஏற்பட்டு, அதன் காரணமாக செடிகள் கருகி இருக்கலாம். வேறு நோய்கள் தாக்க வாய்ப்பில்லை. எனினும், நேரடியாக ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில், அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கூட்டுறவு வங்கிகளைப் போல் இனி மாநில வேளாண் வங்கியிலும் விவசாயக் கடன்!
Share your comments